13.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசியல் சட்டத்தை அழிக்க ஆர்.எஸ்.எஸ். வேலை செய்கிறது, ராகுல் தாக்கு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மகாராட்டிராவில் நடந்த விவசாயிகள் தற்கொலை குறித்து மோடி மவுனம் ஏன்? காங்கிரஸ் கேள்வி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜார்கண்ட் தேர்தலில் பெண்களுக்கு 33% வேலை ஒதுக்கீடு – ஜேஎம்எம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
தி டெலிகிராப்:
* பாஜகவை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றினால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும், அகிலேஷ் காட்டம்.
* பாஜக தனது ‘கோடீஸ்வர நண்பர்களுக்கு’ வழங்கிய சலுகைகளை விட இந்தியா கூட்டணி பெண்கள், விவசாயிகளுக்கு முன்னேற்ற திட்டங்களை தரும்: ராகுல்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பிளவுபடுத்தும் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினை களை பாஜக எழுப்பினால் நாங்கள் அரசாங்கத்தில் சேர மாட்டோம்; தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால், எதிர்க்கட்சியான எம்.வி.ஏ உடன் என்சிபி கைகோப் பதையும் பரிசீலிப்போம், என்று அஜித் என்.சி.பி. கட்சி வேட்பாளர் நவாப் மாலிக் திட்டவட்டம்.
* தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு அரசு பாடுபடுகிறது, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு எஸ்சி/எஸ்டி தொடக்க நிதியை உருவாக்கியது. 2023ல் 30 கோடியாக இருந்த எஸ்சி/எஸ்டி நிதி ஒதுக்கீட்டை 50 கோடியாக உயர்த்தியது, துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு.
– குடந்தை கருணா