உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு அளவில் கோரிக்கை முழக்கமிடும் அறப்போராட்டம் நேற்று நடந்ததில், காரைக்குடி மாவட்டக்கிளை ஏற்பாட்டில், கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு நேற்று (12.11.2024) மாலை தொடங்கியது. இதற்கு மாநிலத்துணைத்தலைவர் புலவர் ஆறு. மெய்யாண்டவர் தலைமை வகித்தார். தமிழ் ஆர்வலர் அ.சி.தியாகராசன் முன்னிலை வகித்தார். ” இந்திய அரசை வலியுறுத்தி, “செம்மொழித் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். ” ” திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். “சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் ” என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கமிட்டார்கள். இந்த அறவழிப்போராட்டத்தில் பாரதிதாசன் தமிழ்ப் பேரவை, வள்ளுவர் பேரவை, வீறு கவி முடியரசனார் அவைக்களம், தமிழ்த்தாய் கலைக்கூடம், பகுத்தறிவாளர் கழகம், தமுஎகச அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், குறள் வழித் தொண்டர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றார்கள்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி காரைக்குடியில் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!
Leave a comment