தஞ்சாவூர், நவ.9- தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவில் ஆதீனம் 28ஆவது குருமகா சன்னிதானம் மகாலிங்க சுவாமிகள், பெங்களூரு பெண்ணை திருமணம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சூரியனார் கோவில் ஆதீனம் சிறீகாரியமாக நியமிக்கப்பட்டுள்ள சுவாமிநாத சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆதீனத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என் பதற்காக இதை தெரிவிக்கிறேன். கருநாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமா சிறீ என்ற பெண்ணை, ஆதீனம் 28ஆவது குருமகா சன்னிதானம் மகா லிங்க சுவாமிகள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
அந்தப் பெண் குறித்து விசாரித்த வகையில், பல குற்றப் பின்னணி உடையவர். அவருக்கு அதிகளவில் சொத் துக்கள் இருப்பதாகக் கூறி, பலரை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. கிட்டத்தட்ட, 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்க அவர் திட்டம் தீட்டி, இந்த பதிவு திருமணத்தை செய்துள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
துறவறத்தில் உள்ளவர்கள் இல்லறம் நோக்கிச் செல்வது ஏற்புடையதல்ல. இது, ஆதீன சம்பிரதாயத்திற்கு எதிரானது. எனவே, சூரியனார் கோவில் ஆதீனத்தின் மாண்பை போற்றி பாதுகாக்கும் வகையில், சைவ ஆதீன குருமகா சன்னி தானங்கள் இதில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.
பெங்களூரைச் சேர்ந்த ஹேமாசிறீ மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை முழுமையாக சேகரித்து, திருவிடைமருதுார் காவல் கண்காணிப்பாளரிடம் புகாராக அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாலிங்க சுவாமி பதில்: ஆதீனம் 28ஆவது குருமகா சன் னிதானம் மகாலிங்க சுவாமிகள் கூறியதாவது:
மடத்தின் சம்பிரதாயப்படி, திருமணமானவர்கள் குரு மகா சன்னிதானங்களாக இருப்பதற்கு எந்த தடையும் இல்லை. இதுகுறித்து அறநிலைய துறைக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளோம். ஆதீன குருமகா சன்னிதானங்களுக்கு என, தனி அதிகாரம் உள்ளது.
நான் ஆதீனமாக பதவி ஏற்றது முதல் சூரியனார் கோவில் ஆதீன தலைமை மடத்தில், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திருப் பணிகளை செய்துள்ளேன். மடத்தின் சொத்துக்களை காக்க, பல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். அவற்றை முறையாக பாதுகாத்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற கடமையை அவர்களது ஒத்துழைப்போடு செய்து வருகிறேன்.
திருவாவடுதுறை ஆதீனத்தி லிருந்து நீக்கப்பட்ட சுவாமிநாத சுவாமிகளை, நான் மடத்தில் சிறீ கார்யமாக நியமித்தேன். அவர் இங்கு தங்குவதில்லை. அவர் தன் வீட்டிற்கு சென்ற பின், தன் வேடத்தை மாற்றிக் கொள்வார். அவர் ஏற்கனவே மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. இருப்பினும், அவர் ஆன்மிக பணிகளை செய்ய விரும்பியதால், அதுகுறித்து கவனத்தில் கொள்ளாமல் பணிகளை செய்ய அனும தித்தேன். சுவாமிநாத சுவா மியை யாரோ தவறாக இயக்குகின்றனர். குருவின் கட்டளையை ஏற்று அவர் நடப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.