டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
அமெரிக்க தேர்தலில் அமோக வெற்றி; டிரம்ப் மீண்டும் அதிபர் ஆகிறார்: 3.5 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் தோல்வி.
மகாராட்டிராவில் காங்கிரஸ் – உத்தவ் சிவசேனா – சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், பெண்களுக்கு மாதம் ரூ.3000 நிதியுதவி, பேருந்தில் கட்டணமில்லா பயணம், வேலை கிட்டா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 என வாக்குறுதி.
தெலங்கானாவில் தொடங்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவரங்களை ஒன்றிய அரசுக்குத் தெரியப்படுத்த, ஆளுநரிடம் முதலமைச்சர் ரேவந்த் வேண்டுகோள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
வீட்டை இடித்த உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம், ‘இது சட்டவிரோதம்’. ரூ.25 லட்சம் இழப்பீடு: உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு – 2019இல் இடிக்கப்பட்ட வீடு மகாராஜ்கஞ்ச் குடியிருப்பாளரின் புகாரின் அடிப்படையில் 2020இல் பதிவு செய்யப்பட்ட ரிட் மனுவை தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.
தி டெலிகிராப்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஏகபோக நடைமுறைகளை ராகுல் காந்தி விமர்சனம். ‘ஏகபோக கூட்டு நிறுவனங்கள்’ மீதான தனது விமர்சனத்தை வணிகங்கள் மீதான தாக்குதலாக தவறாக கருதக் கூடாது என ராகுல் விளக்கம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
தமிழ்நாட்டில் ஆறு முதல் பத்து வயதுள்ள குழந்தைகளில் 91% மட்டுமே பள்ளியில் சேர்க்கப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது. கருநாடகா 97.4% மாணவர் சேர்க்கையுடன் தென் மாநிலங்களில் முன்னணியில் உள்ளது. கேரளா 94.4%, மற்றும் தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் 91.1%. தேசிய அளவில், திரிபுரா 97.9% ஆக உயர்ந்த இடத்தில் உள்ளது, தேசிய சராசரி 90.1%.-
குடந்தை கருணா