திருப்பூர், நவ.3 திருப்பூரில் அணிப வரின் உடலின் வெப்பத்தைக் கண்ட றியும் வகையில் புதிய டீ-சா்ட் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் அம்மாபாளையம் பகுதியில் சென்சியா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற ஆடை தயாரிப்பு நிறுவனத்தை சொக்கலிங்கம் என்பவா் நடத்தி வருகிறார். இவரின் புதிய கண்டுபிடிப்பான உணா்திறன் மை பதிக்கப்பட்ட டி-சா்ட் அணிபவா்களின் உடல் வெப்பநிலையை பார்வைக்குக் குறிக்கும் ஆடை தயாரித்து அசத்தி உள்ளார். இத்தகைய ஆடைகள் பசுமையா னது, பாதுகாப்பானது, பக்க விளைவுகள் அற்றது என்கிறார் சொக்க லிங்கம். அவா் மேலும் கூறியதாவது:
மறு சுழற்சிக்கு உட்படுத்தக் கூடியது புவியில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத. இந்த ஆடையில் வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டை அடையும் போது நிறத்தை மாற்றுகிறது. வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கு கீழே குறைந்தவுடன் இந்த மை அதன் அசல் நிறத்திற்கு திரும்புகிறது. இத்தகைய ஆடைகள் பருத்தி, பாலியெஸ்டா் ரக துணிகள் என அனைத்து ரக துணியிலும் இத்தகைய புதிய கண்டு பிடிப்பு ஆடைகளை தயாரிக்க இயலும். சுவிட்சா்லாந்தில் உள்ள நெஸ்லே கம்பெனிக்கு இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவா்களும் இது மாதிரியான ஆடைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றனா்.
இத்தகைய ஆடைகள் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சிப் வைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதால் உடம்பில் உள்ள முழு பகுதியின் வெப்ப நிலையை அறிய முடியாது.விளையாட்டு வீரா்களுக்கு இத்தகைய ஆடைகள் பொருத்தமானதாக இருக்கும். சீனாவில் இருக்கக்கூடிய ஆடைகள் துவைக்க இயலாது என்பதுடன், விலை அதிகமாக இருக்கும்,திருப்பூரில் தயாரிக்கப் பட்ட இத்தகைய ஆடைகள் புவியியல் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது, மறுசுழற்சிக்கு உட் படுத்தக்கூடிய வகையில் பயன்படுத்த லாம், கொசுக்கடியில் இருந்து விடுபடுவதுடன், பக்க விளைவுகள் அற்றது என்றார்.
அமெரிக்காவுடன் நேரடி போர்.. ரஷ்யா திடீர் எச்சரிக்கை
மாஸ்கோ, நவ.3 அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நேரடி போர் ஏற்படும் சூழல் உருவாகி வருவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ எச்சரித்துள்ளார். பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லாவ்ரோவ், அமெரிக்காவில் ரஷ்யாவுக்கு எதிரான மனப்பான்மையை அதிபர் பைடன் அதிகரிக்கச் செய்து விட்டதாகவும், இதனால் 2 நாடுகள் இடையே நேரடி போருக்கான சூழல் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.