சென்னை, நவ.1 ‘படித்த இளம் தலைமுறையினர், அவரவர் பகுதியில் உயர்தர வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதே, அரசின் நோக்கம்’ என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ்நாட்டில் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள, படித்த இளம் தலைமுறையினர், அவரவர் பகுதியிலேயே, உயர்தர வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடுகள், அவரது வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் துவக்கப்பட்ட, தஞ்சை ‘டைடல் பார்க்’கில், அனைத்து இடங்களும் நிறுவனங்களால் நிரம்பி, தஞ்சை மற்றும் அதை சுற்றிய பகுதிகளைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு, உள்ளூரிலேயே வேலை அளிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
தூத்துக்குடியில் விரைவில் துவக்கப்பட உள்ள டைடல் பார்க்கில், இப்போதே இடங்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. இது, அப்பகுதியில் உள்ள படித்த, இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக படித்த பெண்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.
பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்
கோவிலில் கணவரை கட்டிப்போட்டு
மனைவியை கூட்டு பாலியல் வன்முறை
போபால், நவ.1- பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த புதிதாக திருமணமான இணையர்கள் அங்குள்ள பாபா பைரவா கோவிலுக்கு சென்றுள் ளனர். அங்கு வழிபாட்டினை முடித்த அந்த இணையர்கள் கோவிலில் உள்ள ஒரு பகுதியில் இருந்த போது, அவர்கள் இருந்த பகுதியில் வேறு எவரும் இல்லாததைக் கண்ட 8 பேர் கொண்ட ஒரு கும்பல் இந்த இணையர்களிடம் வந்து தகராறு செய்துள்ளனர். மது போதையில் இருந்த அந்த கும்பல் கணவரைத் தாக்கி அவரை கட்டிபோட்டுள்ளனர்.
அதன் பின்னர் மனைவியை அந்த கும்பல் கூட்டுப்பாலியல் வன்முறை செய்ததோடு இந்த கொடூர செயலை அந்த கும்பல் காட்சிப்பதிவாக வும் பதிவு செய்து, இந்த நிகழ்வு பற்றி வெளியே சொன்னால் காட்சிப்பதிவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டி யுள்ளனர். எனினும் இந்த நிகழ்வு குறித்து அந்த இணையர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் ஈடுபட ராவிஷ் குப்தா, லவ்குஷ் கோரி, ராஜேந்திர கோரி, கருட் கோரி, தீபக் கோரி, ராம்கிஷான் கோரி மற்றும் சுசில் கோரி உள்ளிட்ட 7 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வில் தொடர்புடைய ராஜ்நிஷ் கோரி என்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அறநிலையத்துறை வேலை..
சென்னையில் உள்ள கோவிலில் பணியிடம்!
ரூ.48 ஆயிரம் ஊதியம்
சென்னை, நவ.1- சென்னை மதுரவாயலில் உள்ள மார்கசகாய ஈஸ்வரன் திருக்கோயிலில் காவலாளி உள்பட 7 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்தறை கோவில் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை மதுரவாயலில் உள்ள ஈஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள காவலாளி (வாட்ச்மேன்) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் மற்றும் ஊதியம்:
சுயம்பாகி: 01 – ரூ. 13,200 – 41,800 வரை ஊதியம்
மேளக்குழு: 01 – ரூ.15,300 – 48,700
பகல் காவலாளி: 01 – ரூ.11,600 – 36,800
இரவு காவலர்: 01 – ரூ.11,600 – 36,800
இரவு காவலர்: 01- ரூ.11,600 – 36,800
(வரசித்தி விநாயகர் திருக்கோயில்)
திருவலகு: 02 – ரூ.10,000 – 31,500
கல்வி தகுதி: தமிழில் நன்கு எழுதப் படிக்க தெரிந்து இருக்க வேண்டும். மேலும் சுயம்பாகி பணியிடத்திற்கு திருக்கோயில் பழக்க வழக்கத்தின் படி நாள்தோறும் விழாக்காலங்களில் பிரசாதம் தயாரிக்க தெரிந்து இருக்க வேண்டும். திருக்கோயில்களின் பூஜை முறைகளை பற்றி தெரிந்தவராக இருக்க வேண்டும். மேளக் குழுவிற்கு அரசு அல்லது மத நிறுவனங்கள், பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து உரிய சான்று பெற்றிருக்க வேண்டும். இதர விவரங்களை திருக்கோயில் அலுவலக நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிப்பது எப்படி?: அனைத்து பணியிடங்களுக்கும் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப் படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலேயே சமர்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 27.11.2024 கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள:
https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=208