சென்னை, அக்.27- தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து அரசமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கும், கலாச்சார பண்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கின்ற வகையிலும் செயல்பட்டு வருகிறார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தபோதிலும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை.
சமீபத்தில் ஏ.பி.வி.பி. மாநிலத் தலைவர் சவிதா ராஜேஷை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராக நியமனம் செய்திருக்கிறார்.
அனைத்து துறைகளும் காவி மயமாக்கப்பட்டு வருகிற சூழலில், கல்வித் துறை யையும் காவி மயமாக்குகிற முயற்சி யாக இந்த நியமனத்தை செய் திருக்கிறார். எனவே, இந்த நியமனத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.