சென்னை, அக். 23- சென்னை, எண்ணூர் உள் னிட்ட துறைமுகங் களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் புயல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தற்போது, உள் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்தது.
இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து, ‘டானா’ புயலாக உருவெடுத்துள்ளது.
அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 25ஆம் தேதி அதிகாலை வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒடிசா மாநிலம் பூரி – சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
9 துறைமுகங்கள்
புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழ் நாட்டுக்கு பெரிய மழை ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும் ‘டானா புயல்’ தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
இதன்படி, காட்டுப்பள்ளி, எண்ணூர் காமராஜர். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறை முகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள சூழலில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை ஏற்பட் டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படா மல், பலமாக காற்று வீசும் என்றும் அர்த்தம் என்று துறைமுக அதிகாரிகள் கூறினர்.
இந்த புயலினால் தமிழ்நாட் டுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை. ஆனால் தென் தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிக ளிலும், இடி, மின்னலுடன் மிதமான மழையும்,நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல். ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி,திருப்பத் தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து இருக்கிறது.