சென்னை, அக்.22 பக்தியை பகல் வேஷ அரசி யலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்கின்றனர். அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது.
தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் என முத்தாய்ப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோவில்களில் அன்ன தானம் திட்டம் மூலம் நாள்தோறும் 92 ஆயிரம் பேர் பசியாறுகின்றனர். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப் படாமல் இருந்த தங்க முதலீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார்.
இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப் பெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
10 ஆண்டுகள் ஓடியும் ரயில்வே துறையில் காலியிடங்களை நிரப்பாதது ஏன்?
ப.சிதம்பரம் கேள்வி
சென்னை, அக். 22- காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒன்றிய மேனாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ப.சிதம்பரம் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- அரசிதழில் அல்லாத பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 14,63,286 பணியிடங்களில், 2,61,233 பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரயில்வே ஒப்புக் கொண்டுள்ளது. இது மொத்த பணியிடத்தில் 17.85 சதவீதம் அல்லது 6 பணியிடத்துக்கு 1 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.
ஏன் இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை?. அதனை நிரப்புவதற்கு 10 ஆண்டுகள் போதவில்லையா?
ஒரு பக்கம் பெரிய அளவில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் முறையாக கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை செய்யாததன் காரணமாக ஒவ்வொரு வாரமும் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதுதான் குறைவான அரசு, நிறைவான ஆட்சி என்பதன் பொருளா? எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் இது மோசமான மற்றும் திறமையற்ற நிர்வாகமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் ஃபரூக் அப்துல்லா
சிறிநகர், அக்.22 பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் மேனாள் முதல மைச்சருமான ஃபரூக் அப்துல்லா கூறினார்.
அவா் மேலும் பேசுகையில், ‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என தெரியவில்லை. இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் நாட்டு ஆட்சியாளா்கள் விரும்பினால் காஷ்மீா் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
காஷ்மீரை பாகிஸ்தானால் எந்நாளும் ஆக்கிரமிக்க முடியாது. கடந்த 1947-ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பயங்கரவாத தாக்குதலை நடத்தி வெற்றிபெற முயற்சித்து அனைத்திலும் தோல்வியுற்ற பிறகும் மீண்டும் தாக்குதல்களை தொடா்வதால் ஒரு பயனும் இல்லை. இதற்கு பதில் உங்கள் நாட்டில் உள்ள வறுமை, வேலைவாய்ப்பு ஆகிய சமூக பிரச்சினைகளை தீா்க்க முயலுங்கள்.
இதற்குப் பிறகும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் பாகிஸ்தான் கடும் விளைவு களை சந்திக்க நேரிடும் என்றார்.