நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றி வந்த லாரி திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. லாரியில் இருந்த பெட்ரோல் கீழே கொட்டுவதை பார்த்த குடிசைப் பகுதி மக்கள், ஓடி வந்து அதனை கேன்களில் பிடித்தனர். அப்போது சிந்தியிருந்த பெட்ரோலில் தீப்பற்றியதில் பெண்கள், குழந்தைகள் என 90 பேர் துடிதுடித்து இறந்தனர். பெட்ரோலை விற்று ஒருவேளை பசியாறலாம் என்ற ஆசையில் வந்தவர்களை, நெருப்பு தின்ற நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.