பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், சில கடைகளில் வாங்க மறுக்கின்றனர் என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அந்த தகவல் தவறானது. வதந்தி என்று மறுத்துள்ள ரிசர்வ் வங்கி, பழைய 100 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்போர் மீது புகார் அளிக்க கேட்டுக் கொண்டுள்ளது.