கவுகாத்தி, அக். 15- அசாமின் உதல்குரி மாவட்டத்தில் 13.10.2024 அன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிரம்மபுத்ரா நதியின் வடக்கு கரையில் உள்ள உதல்குரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கவுகாத்தியின் வடக்கே 105 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 4.2 புள்ளிகளாக பதிவானது.
இதன் தாக்கத்தால், தர்ராங், சோனிபூா் மற்றும் பிரம்மபுத்ராவின் தெற்கு கரையிலுள்ள காமரூப், மொரிகான், நாகோன் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.
வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதியடைந்து வெளியேறினா். மேற்கு அருணாசல பிரதேசம் மற்றும் கிழக்கு பூடான் வரை இந்த நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியாக வடகிழக்கு பிராந்தியம் உள்ளது.