கவுரி லங்கேசைக் கொலை செய்து பிணையில் வந்தவர்களுக்கு
மாலை அணிவித்துப் பூஜை செய்த சங்கிகள்!
பெங்களூரு, அக்.15 கருநாட காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர்நீதி மன்றம் பிணை வழங்கியுள்ளது. இதனை அடுத்து கருநாடக அனைத்து ஹிந்து அமைப்புகள் சார்பில் கொலையாளிகளுக்கு வரவேற்பு, சிறப்பு செய்யப் பட்டது.
பிரதமர் மோடி பாசிச ஆட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்துத்துவ அமைப்புகளின் மக்கள் விரோத கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கிடையில் இந்தக் கொலையில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 16 பேர் ஏற்ெகனவே பிணையில் விடுதலை ஆகி மீண்டும் ஹிந்துத்துவ அமைப்புகளில் செயலாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மீத முள்ள இரண்டு கொலைக்குற்ற வாளிகளுக்கும் கருநாடக உயர்நீதிமன்றம் பிணை வழங்கி யுள்ளது. இதனை அடுத்து ஏற்ெகனவே பிணையில் இருப்பவர்களும், கருநாடக அனைத்து ஹிந்து அமைப்பின் முக்கிய பிரமுகர்களும் கொலைக்குற்றவாளிகளுக்குச் சிறப்பான வரவேற்பு கொடுத்து, சால்வை அணிவித்துக் கொண்டாடினர்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளி களில் ஒருவனான நவீன்குமார், பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தோம் என்று காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.