புதுடில்லி, செப்.26 ‘நீதிபதிகள் கவனத்துடன் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் நேற்று (25.9.2024) எச்ச ரிக்கை விடுத்தது. இந்தி யாவின் எந்தவொரு பகுதி யையும் ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட முடியாது எனவும் நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
கருநாடக உயா்நீதிமன் றத்தில் அண்மையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிபதி வி.சிறீஷாநந்தா, விசாரணையில் ஆஜரான பெண் வழக்குரைஞருக்கு எதிராக சா்ச்சை கருத்தைத் தெரிவித்ததோடு, பெங்க ளூரில் முசுலிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்றும் குறிப்பிட்டார். இதுதொடா்பான காணொலி சமூக ஊடகத் திலும் பரவி வைரலானது. தனது கருத்து பெரும் சா்ச்சையான நிலையில், அதற்காக பகிரங்க மன்னிப்பை நீதிபதி கோரினார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையி லான 5 நீதிபதிகள் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. கருநாடக உயா்நீதிமன்ற பதிவாளா் சார்பில், இந்த விவகாரம் தொடா்பான அறிக்கை சமா்ப்பிக்கப் பட்டது. அதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:
வழக்கு விசாரணை யின்போது நீதிபதிகள் சாதாரணமாக தெரிவிக் கும் கருத்துகள், பெண் வெறுப்பு கொண்டதாகவோ அல்லது சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு பாதகமானதாகவோ கருதப்படலாம். அவ்வாறு கருதப்படும்போது, பெரும் சா்ச்சையாக பிரதி பலிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்ட நீதிமன்றத்தின் மீது மட்டுமன்றி, ஒட்டுமொத்த நீதித் துறை மீதும் எதிர்மறையான எண்ணம் உருவாக வாய்ப்பாக அமைந்துவிடும்.
எனவே, வழக்கு விசா ரணை உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின்போது பெண் வெறுப்பு அல்லது எந்தவொரு சமூகப் பிரிவுக்கும் பாதக மான கருத்துகளை வெளி யிடாமல் கவனமாக நீதிபதிகள் செயல்பட வேண்டும்.
இந்தியாவின் எந்த வொரு பகுதியையும் ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட முடியாது. ஏனெனில், அவ்வாறு குறிப்பிடுவது அடிப் படையில் நமது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதி ரானது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
மேலும், ‘இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி வாதியாக சோ்க் கப்படவில்லை என்பதால், இந்த விவகாரத்தில் மேலும் எந்தவொரு அறிவுறுத்தல்களையும் வழங்க விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டு, விசா ரணையை முடித்து வைப் பதாக தெரிவித்தனா்.