அகமதாபாத், செப்.24 சிறீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம்
13-ஆம் தேதி நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், இது தொடர்ந்து தனது பணிகளை செய்து வருகிறது. மேலும் இவை புதிய கண்டுபிடிப்பு களையும் நிக்ழ்த்தி வருகிறது.
அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள், நிலவின் தென்துருவப் பகுதியில் பிரக்யான் ரோவர் தனது தரையிறங்கும் இடத்திற்கு அருகில் 160 கி.மீ. அகலத்தில் பெரிய பள்ளத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த பள்ளம் தென் துருவ-எய்ட்கன் படுகையை உருவாக்குவதற்கு முன்பே உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பும் இந்த பள்ளம் குப்பைகளால் நிரப்பப்பட்டு சிதைந்த நிலையில் உள்ளது.
இதன் மூலம் விஞ்ஞானிகள் சந்திரனில் புதைக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்வதற்கான அரிய வாய்ப்பை பிரக்யான் ரோவர் வழங்கியுள்ளதால், இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த பள்ளத்தில் இருந்து சேகரிக்கும் பழங்கால தகவல்கள் சந்திரனின் ஆரம்ப கால வரலாறு மற்றும் அதன் தனித்துவமான உருவாக்கம் பற்றி இருந்த நமது புரிதலை மாற்றியமைக்க முடியும் என்று கூறுகின்றனர்.