திருப்பதி, செப்.24- ஆந்திரா மாநிலம், காக்கிநாடா தொகுதி ஜனசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாந்தம் நானாஜி. காக்கிநாடாவில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டிக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமாக தடயவியல் மருத்துவத் துறை தலைவரான மருத்துவர் உமா மகேஸ்வரராவிடம் பேசினார். அப்போது பாந்தம் நானா ஜிக்கு, உமா மகேஸ்வர ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது தொண்டர்கள் மருத்துவர் உமா மகேஸ்வர ராவை தாக்கினர். மருத்துவரைத் தாக்கிய காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை அறிந்த ஆந்திர மாநில மருத்துவ சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.
மருத்துவர்கள் மீது எதிர் காலத்தில் இதுபோன்ற தாக்கு தல்கள் நடைபெறாமல் இருக்க பவன் கல்யாண் தனது கட்சி சட்ட மன்ற உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டர்களுடன் சேர்ந்து மருத்து வரைத் தாக்கியதற்காக அவரைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் மருத்துவரை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் 22.9.2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டில் யாகம் செய் தார். அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில்:-
செய்யக்கூடாத வகையில் நடந்து கொண்டேன். யாரும் என்னை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பிறரது தவறுக்காக விரதம் இருந்து பூஜை செய்யும் பவன் கல்யாண் மற்றவர் களுக்கு முன்னுதாரணமாக திகழ் கிறார். என் தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். மருத்துவரை தாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்ட பிறகும் மருத்து வர்கள் காக்கிநாடா காவல் துறையில் புகார் தெரிவிக்க போவதாக அறிவித்துள்ளனர்.