புதுடில்லி, செப்.22 உயர்நீதிமன்றங் களுக்கு தலைமை நீதிபதிகளை நியம னம் செய்து குடியரசுத்தலைவர் உத்தர விட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.சிறீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று சிறீராமை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதி பதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இமாச்சப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமச்சந்திர ராவ், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டில்லி உயர்நீதி மன்ற நீதிபதி ராஜீவ் ஷக்தர், இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைத், மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி இந்திர பிரசன்ன முகர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி நிதின் மதுகர் ஜம்தர், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டஷி ரப்ஸ்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் நியமன தாமதம் குறித்து உயர்நீதிமன்ற கேள்வி எழுப்பிய நிலையில் புதிய நீதிபதிகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.