காரைக்குடி, ஆக.27 காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியானது காரைக்குடி நேசனல் ஃபயர் அன்ட் சேஃப்டி காலேஜ்-இல் 24.08.2024 அன்று காலை 9.30 மணியளவில் காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் விஞ்ஞானி சு.முழுமதி தலைமையிலும் முனைவர் மு.சு.கண்மணி, மாநில துணைப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், ஒ. முத்துக்குமார், மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செல்வம் முடியரசன், மாவட்ட அமைப்பாளர், த. பால கிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட ஆசிரியர் அணி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ந. செல்வ ராசன் வரவேற்றுப் பேசினார்.
காரைக்குடி மாவட்ட கழக் காப்பாளர் சாமி. திராவிடமணி, மாவட்ட கழகத் தலைவர் ம.கு.வைகறை, சி.செல்வமணி மாவட்டச் செயலாளர், கொ.மணிவண்ணன் மாவட்ட துணைத் தலைவர், வீ.முருகப்பன் தேவகோட்டை நகரத் தலைவர், ந.ஜெகதீசன் காரைக்குடி நகரத் தலைவர், குமரன் தாஸ் மாவட்ட பகுத்தறிவாளர் எழுத்தாளர் அணி, ஜோசப், தேவகோட்டை ஒன்றியச் செயலாளர், பிரவீன் முத்துக்குமார், மாவட்ட மாணவர் கழக அமைப்பா ளர் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியாளர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து சிறப்பு செய்தனர்.
காரைக்குடி கழக மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான வழி காட்டி நிகழ்ச்சி, அடிகளாரின் நூற்றாண்டு விழா என தொடர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் சிவ கங்கை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக வேறு சில இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி கள் நடைபெற்று வரும் நிலை யில், கழக தோழர்களின் ஒத்து ழைப்போடும், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர், மாவட்டச் செயலாளர், மாவட்ட அமைப்பாளர் ஆகியோரின் தொடர் முயற்சியின் காரணமாகவும் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய இப்பேச்சுப் போட்டியில் மொத்தம் 19 போட்டியாளர்களும், மாணவர்களும் கலந்து கொண்ட னர். மாணவிகளே அதிகம் கலந்து கொண்டனர் என்பது குறிப்பி டத்தக்கது.
கழகத்தால் அறிவிக்கப்பட்ட தலைப்புகளில் போட்டியாளர்கள் சிறப்பாக பேசி, தங்களது திறமை யையும், பெரியாரின் மீதான நன்மதிப்பையும், உணர்வுப் பூர்வ மாக வெளிப்படுத்திய விதம் இளம் மாணாக்கரிடம் பெரியாரிய சிந்தனையை வேரூன்றச் செய்ய இது போன்ற போட்டிகள் வலுசேர்க்கும் என்பதை நிரூபித்துக் காட்டியது.
அவ்வாறு பங்கேற்றுப் பேசிய போட்டியாளர்களில் ‘‘சுய சிந்தனை யாளர் பெரியார்’’ என்ற தலைப்பில் பேசிய பீ.ஜோஷி அபர்ணா, டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி, காரைக்குடி முதல் இடத்தையும், ‘‘என்றும் தேவை பெரியார்’’ என்ற தலைப்பில் பேசிய செ. ராபின்சன், ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை, இரண்டாம் இடத்தையும் சி. ராஜபாரதி, சேவு கன் அண்ணாமலைக் கல்லூரி, தேவகோட்டை, மூன்றாம் இடத்தை யும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு தலா ரூ.3000/-, ரூ.2000/-, ரூ.1000/- ரொக்கப் பரிசை,
பெரியார் சாக்ரடீஸ் நினை வாக கழகக் காப்பாளர் சாமி திராவிடமணியும், மாவட்ட கழக தலைவர் ம.கு. வைகறை நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களையும், மாவட்ட அமைப்பாளர் செல்வம் முடியரசன் புத்தகப் பரிசையும் வழங்கி வாழ்த்தினார்கள்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்பேச்சுப் போட்டிக்கு நடுவர்க ளாக இருந்து சிறப்பாக வழி நடத்தி, சரியான தீர்ப்பினை வழங்கிய
முனைவர் செ.கோபால்சாமி, பேராசிரியர், பன்னாட்டு வணிகம் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, முனைவர் கா.சுபா, உதவிப் பயிற்றுநர், அழகப்பா பல்கலைக் கழக உடற்கல்வியியல் கல்லூரி, காரைக்குடி, முனைவர் செ.பவுல் புனிதா, உதவிப் பேராசி ரியர், மகளிரியல் துறை, அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி, ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிறைவாக பகுத்தறிவாளர் கழக தேவகோட்டை நகரத் தலைவர் சிவ. தில்லைராசா நன்றி கூறினார்.