உலகத்தில் பிரபலமான நூறு பெண்கள் குறித்து பி.பி.சி. வெளியிட்ட பட்டியலில், இந்திய பெண்கள் பத்து பேர் இடம் பெற்றுள்ளனர்.
பெண்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் பிரச்சினைகளை விவாதிக்கும் நூறு பெண்கள் குறித்த இந்த ஆண்டு தொடரில், மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் ஊர்வசி சாஹ்னி
அறுபத்து இரண்டு வயதான ஊர்வசி சாஹ்னி, “ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளை’ என்ற கல்வி அமைப்பின் நிறு வனராகவும், தலைமைச் செயல் அலுவலராகவும் உள்ளார். முப்பத்து நான்கு ஆண்டுகளாகச் சமூகச் சேவைகளிலும் பெண் கள் உரிமைகளுக்காகவும் பணியாற்றி வருகிறார். “மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான ஆற்றலான கல்வியிலும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்’ என்கிறார் இவர்.
மெஹ்ரூனிசா சித்திகி
அறுபத்து அய்ந்து வயதான மெஹ்ரூனிசா சித்திகி, பாலிவுட் நடிகர் நவாஜுதீன் சித்திகியின் தாய். “ஆற்றலுக்கு வயது தடையில்லை’ என்கிறார் இன்றும் சுறுசுறுப்புள்ள மெஹ்ரூனிசா.
இரா திரிவேதி
முப்பத்து இரண்டு வயதான இரா திரிவேதி எழுத்தாளராகவும், சமூகச் செயல்பட்டாளராகவும் இருந்து வருகிறார். தனது எழுத்தின் வாயிலாக, “கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்க முடியும்’ என்கிறார்.
அதிதி அஸ்வதி
முப்பத்து அய்ந்து வயதான அதிதி அஸ்வதி, இம்பைப் நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைமைச் செயல் அலுவலராகவும் உள்ளார். இவர் தொழில்நுட்பம், விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி கல்வித் துறையில் மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளார்.
பிரியங்கா ராய்
பதினாறு வயதான பிரியங்கா ராய் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவி. மேற்கு வங்க மாநிலத்துக்கு உள்பட்ட ராணா காட்டில் இருந்து புதுடில்லிக்கு ஓராண்டுக்கு முன்பு வந்த இவர், கோவிந்த்புரியில் உள்ள டி.ஏ. காலனியில் தனது தாயுடன் வசிக்கிறார். “பிறருக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்க விரும்பு கிறேன். என் சொந்தக் காலில் நிற்க விரும்புகிறேன்’ என்கிறார் இவர்.
நித்யா தும்பல் ஷெட்டி
முப்பத்து ஒரு வயதான நித்யா, தும்மஷெட்டி ஃபார்சுன்பிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். சுகா தாரச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் அதிபரான இவர், தொழில்நுட்பப் படைப்பாற்றல் வாயிலாக கல்வி, சுகாதாரத்தில் சமூகத்தில் நிலவும் பாலின பாகு பாட்டை அழித்துவிடலாம் என்கிறார்.
தூலிகா கிரண்
நாற்பத்து ஏழு வயதான தூலிகா கிரண், ஆசிரியராகப் பணிபுரிகிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக, டில்லி திகார் சிறையில் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அவர் பத்திரிகை யாளராகவும் பணிபுரிகிறார்.
ரூபி கவுர்
கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பன்முகத் தன்மை கொண்ட ரூபி கவுர் வாழ்வியல் தொடர்பான கருத்துகளைத் தனது எழுத்துகளில் பிரதிபலிக்கிறார். கனடாவில் வசிக்கும் இந்தியவம்சாவளியைச் சேர்ந்தவர் இவர்.
விராலி மோதி
இருபத்து அய்ந்து வயதான விராலி மோதி நடிகையாகவும், மாடலாகவும் பணியாற்றுகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளுக்காகப் போராடுகிறார். இளைஞர்களுக்கான தூதராகவும், ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் செயல்படுகிறார். ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்குப் போதுமான வசதிகளைச் செய்துதர வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
மிதாலிராஜ்
முப்பத்து நான்கு வயதான மிதாலி ராஜ், இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவியாவார். “கடுமையாக உழைப்பேன். எனக்குத் திருப்தி ஏற்படும் வரையில் உழைப்பேன்’ என்கிறார் இவர்.