சென்னை, ஜூன் 26- ‘‘தன் மீதான ஊழல் குறித்து சிபிஅய் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தர விட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்ற எதிர்க்கட்சித் தலைவர், தற்போது சிபிஅய் விசா ரணை கேட்கலாமா?’’ என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்டனர்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆர்ப்பாட் டம் மற்றும் சிபிஅய் விசாரணை கோரியது தொடர்பாக பேசியதாவது.
அதிமுகவினர் 24.6.2024 அன்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர். ஆர்ப்பாட்டம் செய்வது என்பது நியாயம்தான். ஜனநாயகத்தில் எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம். அது நியாயமான முறையில் ஆர்ப்பாட் டமாக இருந்தால், அரசு அதற்கு அனுமதி அளிக்கும். ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்திலே கூட திரும்பத் திரும்ப சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டு மென்று பேசியுள்ளனர்
முறைகேடு வழக்கு: இதே எதிர்க் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது சிபிஅய் விசாரணை கொண்டு வரப்பட் டதை அவர் மறந்திருக்க மாட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி, அதில் முறைகேடு நடந்திருக்கிறது, அதற்கு சிபிஅய் விசாரணை நடத்த வேண்டுமென்று திமுக அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றம் சென்றபோது, அதை சிபிஅய் விசாரிக்க நீதிமன் றம் உத்தர விட்டது.
சிபிஅய் மீது நம்பிக்கை இருந் தால், அந்தச் சவாலை அவர் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சிபிஅய் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரர்தான் இன்றைக்கு இந்த விஷயத்தில் சிபிஅய் விசாரணை வேண்டும் என்று முழங்குகின்றார். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.