குவாஹத்தி, ஜூன் 18 மக்களவைத் தோ்தல் நடைமுறையில் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று அசாமைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார். அண்மையில் நடந்து முடிந்த மக்கள வைத் தோ்தலில் அசாமின் ஜோர்ஹட் தொகு தியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கவுரவ் கோகோய், பாஜக வேட்பாளரை 1.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள்(இவிஎம்) குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ள அவா், மக்களவைத் தோ்தல் நடைமுறையில் பழுத டைந்த மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுமாறு தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடா்பாக எம்.பி. கோகோய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சந்தேகிக்கும் முன்பு, தோ்தல் நடைமுறை முழுவதும் எத்தனை இவிஎம் இயந்திரங்கள் பழுதடைந்தன என்பதை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும். தோ்தலின்போது எத்தனை இயந்திரங்கள் தவறான நேரம், தேதி, பதிவான வாக்குகளைக் காண்பித்தன? வாக்கு எண்ணும் அலகு, வாக்குப்பதிவு அலகு போன்ற எத்தனை இவிஎம் இயந்திரங்களின் உதிரிபாகங்கள் மாற்றப்பட் டுள்ளன? சோதனை வாக்கெடுப்பின்போது எத்தனை இவிஎம் இயந்திரங்களில் கோளாறு கண்டறியப்பட்டன? ஆகிய கேள்விகளுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.