சென்னை, மே 18- பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்க ளுக்கு மே 2024 மாதம் வழங்கு வதற்காக 20,000 மெ.டன் துவரம் பருப்பு மற்றும் 2,00,00,000 பாமா யில் பாக்கெட்டுகள் ரூ.418.55 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகத்தின் மூலம் சிறப்புப் பொது விநியோகத் திட்ட பொருட் களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் கடந்த 14.04.2007 முதல் ஒவ்வொரு மாத மும் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்க களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மே 2024 மாதத்திற்குரிய தேவை யான 20,000 மெ.டன் துவரம் பருப்பு / கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக் கெட்டுகளுக்குரிய இ-ஒப்பந்தப் புள்ளி இந்திய தேர்தல் ஆணைய 18.04.2024 தேதிய ஒப்புதலின்படி 20.04.2024 அன்று கோரப்பட்டு 02.05.2024 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, 04.05.2024 அன்று விலைப் புள்ளி திறக்கப்பட்டது. இதில் குறைந்த விலைப்புள்ளி அளித்திருந்த பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந் ததாரர்களுடன் விலைக் குறைப்பு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட் டன.
விலைக்குறைப்பு பேச்சுவார்த் தையில் நியாயமான விலை கிடைக் கப்பெற்றதால் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக குழுமத் தின் ஒப்புதலின்படி துவரம் பருப்பு விநியோகிப்பாளர்கள் நால்வருக் கும், பாமாயில் விநியோகிப்பாளர் கள் மூவருக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு நாளது தேதி வரை நடப்பு மே மாதத்திற்கு விநியோகிப்பதற் காக நியாய விலைக் கடைகளுக்கு 5,405 மெ.டன் துவரம் பருப்பு மற்றும் 31,19,722 பாமாயில் பாக்கெட்டுகள் நகர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆகவே, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே 2024 மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.