உயர்வு
தமிழ்நாட்டில் சூரிய சக்தி மின் உற்பத்தி அதிக பட்சமாக 4.05 கோடி யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அறிவுறுத்தல்
தபால் மூலம் 2.48 லட்சம் போக்குவரத்து ஆவணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம், விண்ணப்பத்தில் பொதுமக்கள் சரியான முகவரியை குறிப்பிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எச்சரிக்கை
திறந்த நிலை, தொலைதூர மற்றும் இணைய வழிக் கல்வி வாயிலாக 10 நாள்களில் எம்.பிஏ படிப்பு என்ற தவறான மாணவர் சேர்க்கை விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இத்தகைய போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று யுஜிசி தற்போது எச்சரித்துள்ளது.
திரும்ப பெறலாம்
மின் வாரியத்தில் பல்வேறு பணிகளுக்கு செலுத்திய தேர்வுக் கட்டணத்தைத் திரும்ப பெற வரும் மே – 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தரமற்றவை
சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உறுப்பு மாற்று…
சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டினர் இந்தியா வரும் அபாயம் உள்ளதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரவு
அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திச் சுருக்கம்
Leave a comment