கள்ளக்குறிச்சி, ஏப். 1- சேலத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வியாபாரிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். இதை பெற்றுக் கொண்ட அவர், கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் அமைக்க நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
கள்ளக்குறிச்சி ரயில் பாதை அமைத்து, கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் ரயில் நிலையம் அமைக்க கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத் தப்பட்டு பொற்படாக்குறிச்சி வரை ரயில் பாதை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. ஏற்கெ னவே ரயில்வே நிர்வாகம் அறிவித்தபடி கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள துருகம் சாலையில் ரயில் நிலையம் அமைக்கும் இடம் வரை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் நகர மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கள் ளக்குறிச்சி நகர பகுதிக்கு ரெயில் நிலையம் வருமா?, வராதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த் திகேயன் ஏற்பாட்டில் தி.மு.க. நகர செயலாளர் சுப்ராயலு தலை மையில் நகர மளிகை வியாபாரிகள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், வணிகர் சங்கம், காய்கறி வியாபா ரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம், எலக்ட்ரிக்கல் சங்கம் மற் றும் அனைத்து வியாபாரிகள் சங் கம் சார்பில் தலைவர் செல்வகுமார், செயலாளர் ஜெயக்குமார், நகை வியாபாரிகள் சங்க தலைவர் கல்யணன் அகழ்வே கண்டி அருண் கென்னடி மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சேலத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், சின்னசேலம்- கள்ளக் குறிச்சி ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ரயில் நிலையம் அமைக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விரைந்து நிலம் கையகப் படுத் தப்பட்டு ரயில் பாதை பணியை விரைந்து முடிக்கவும், ஏற்கனவே திட்டமிட்டபடி கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும். மேலும் கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.