ஆவடி,மார்ச்.30- பா.ஜன தாவை வீட்டுக்கு அனுப்பாமல் நாங்கள் தூங்கமாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆவடி யில் நேற்று (29.3.2024) காலை விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
தனித்தனியாக வரும் எதிரிகள்
கடந்த முறை நம்முடைய எதிரிகள் (அ.தி.மு.க., பா.ஜனதா) ஒன்றாக வந்தார்கள். இந்தமுறை அவர்கள் தனித் தனியாக பிரிந்து வருகி றார்கள். தேர்தலுக்கு பின் அவர்கள் அனைவரும் ஒன்றாகி விடுவார் கள்.
எனவே 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சசிகாந்த் செந் திலை வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி அவரை நீங்கள் ஜெயிக்க வைத்தால், எதிர்த்து நிற்பவர் கள் டெபா சிட் இழந்தால் நான் மாதம் 2 முறை திருவள் ளூர் தொகுதிக்கு வந்து, முடிந்தவரை தேவையா னதை செய்வேன்.
எல்லோருக்கும் எல்லாமும் வழங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி, கலைஞர் மக ளிர் உரிமைத் தொகையை இதுவரை 1.16 கோடி பேர் பெற்று வருகின்றனர். தேர்தல் முடிந்த பின், 1.60 கோடி பேருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.
ஒரு இடத்தில் கூட…
நரேந்திர மோடிக்கு தமிழ் நாட்டில் ஒரு செல்ல பெயர் வைத்துள்ளோம். பிரதமர் 29 பைசா. தேர்தலுக்கு பின் அவர் செல்லாக்காசுதான்.
தமிழ்நாட்டில் நாமெல் லாம் ஒரு ரூபாய் வரி கட்டி னால், ஒன்றிய அரசு நமக்கு வெறும் 29 பைசாதான் திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜனதா ஆளும் குஜராத் போன்ற மாநி லங்களில் அவை அதிகரித்து வழங்கப்படுகின்றன.
மிக்ஜம் புயலில் தமிழ் நாட்டில் அனைவரும் வெள் ளத்தில் பாதிக்கப்பட்ட போது, பிரதமர் தமிழ்நாட்டில் வந்து பார்த்தாரா?. ஆனால் இப் போது ஏன் வருகிறார்?. கடந்த 10 நாட்களாக இங் கேயே சுற்றுகிறார். அடுத்த 20 நாட்கள் தமிழ்நாட்டில் எங்கு சுற்றி வந்தாலும், தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பா. ஜனதா வெற்றி பெறாது. தமிழ்நாடு மக்கள் அவர்களை ஓட ஓட விரட்ட தயாராக உள்ளனர்.
தூங்க மாட்டோம்
பா.ஜனதாவை பார்த்து, தி.மு.க.வுக்கு தூக்கம் போய் விட்டது என கூறுகின்றனர். ஆமாம், பா.ஜனதா அரசை வீட்டுக்கு அனுப்பாமல் நாங் கள் தூங்க மாட்டோம்.
பா.ஜனதா அரசில் ரூ.7.5 லட்சம் கோடி செலவுக்கு கணக்கு இல்லை. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க ரூ.250 கோடி கணக்கு காட்டியுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் எனும் மருத்துவக் காப்பீட்டு திட்டத் தில், இறந்த 88 ஆயிரம் பேருக்கு ஒரு அலைபேசி எண்ணில் இருந்து, இறந்து போனவர்க ளுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கேட்டு கொண் டிருக்கிறார். அதற்கு பதில் சொல்லவே இல்லை..
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை பற்றி பேசினால் எடப் பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. 9 ஆண்டுகள் கூட இருந்து அனைத்தும் செய்து மாநில உரிமைகளை அடமா னம் வைத்து விட்டார்.
-இவ்வாறு உதயநிதி ஸ்டா லின் பேசினார்.