சென்னை, மார்ச் 30- தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சட்டம் — ஒழுங்கு மிக சிறப்பாக நிர்வகிக் கப்படுவதாக தேர்தல் ஆணையம் பாராட்டியுள்ளது என்று தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
சென்னையில் தூர்தர்ஷன் தமிழ் சென்னை மண்டல செய்தி பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கலந்துகொண்டு பேசியதாவது: அமைதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதற்காக, இந் திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி முதல் வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் வரை அர்ப்பணிப்புடன் பணி யாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் காலகட் டங்களில் தமிழ்நாட்டில் சட்டம் — ஒழுங்கு மிக சிறப்பாக நிர்வகிக் கப்படுவதற்காக தேர்தல் ஆணை யத்தின் பாராட்டுகளை பெற்றிருக் கிறோம். தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கைக்கு ஏற்ப சிறப்பான சட்டம்- ஒழுங்கு பராமரிப்பை மீண்டும் மீண்டும் மக்கள் நிரூபித் துக் காட்டியுள்ளனர். அரசியலில் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தாலும்கூட, சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதற்காக அது தொடர்புடையை ஒவ்வொரு அதிகாரிகளையும் பாராட்டுகிறேன்.
செய்திகள் வேகமாக பரவுவ தற்கு சமூக வலைதளங்கள் காரண மாக உள்ளன. ஆனால் அவை பொறுப்புடன் செயல்படுகின்ற னவா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே நீடிக்கிறது. பல செய் திகள், சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வரை கவனிக்கப்படாம லேயே பரவிக் கொண்டிருக்கின்றன. தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் உள்ளிட்டவை குறித்து மக்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர். தேர்தல் நடை முறைகள் வெளிப்படையானவை என்பதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி வருகிறது. மின் னணு வாக்கு இயந்திரங்கள் பற்றிய மக்களின் சந்தேகங்கள் தீர்வதற் கான நடவடிக்கைகளை வழக்கு கள் மூலம் நீதிமன்றங்களும் மேற் கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் 73 முதல் 74 சதவீதம் மக்கள் வாக் களிப்பது பாராட்டுக்குரியது. அதன் தேசிய அளவு 67 சதவீதம் தான். நாம் சிறப்பாக செயல்படுகி றோம் என்பதைவிட இன்னும் சிறப்பாக செயல்பட அர்ப்பணிக்க வேண்டும். நகர்ப்புற பகுதியில் உள்ள வாக்காளர்கள், சிரமங்கள், சிக்கல்கள் இருந்தாலும்கூட தவ றாமல் ஓட்டுப் போடுங்கள். ஊர கப் பகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின்றன.
பெரிய நகரங்களில் குறைவாக உள்ளது. ஓட்டுப் போடுவதற்கு நமக்கு எவ்வளவோ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. வாக்கா ளர் பட்டியலில் இளைஞர்களின் பெயர் பதிவு சற்று குறைவாக உள் ளது. நீங்கள் வேலைக்கு, படிப்புக்கு எங்கு சென்றாலும், நீங்களே பெயர் பதிவு செய்துகொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. இளைஞர் கள் அதிக அளவில் வாக்குச்சாவடி களுக்கு வர வேண்டும். தமிழ்நாட் டில் 4 லட்சம் அரசு ஊழியர்களும், 3 லட்சம் காவல்துறையினரும் தேர்தல் பணிகளை சுமூகமாக மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள். தேர்தல் பணிகள் மிகக் கடுமையானவை. மிகச் சிரமத்துடன் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க உழைக்கிறார்கள். அவர்களை பாராட்ட வார்த்தை கள் இல்லை. -இவ்வாறு அவர் பேசி னார். இந்த நிகழ்ச்சியில் மேனாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.