திருச்சி, மார்ச் 29- பெரியார் மருந்தியல் கல்லூரியில் மேனாள் மாணவர் கள் சந்திப்புக்கூட்டம் 23.03.2024 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை வகித்த இந்நிகழ்ச்சி மேனாள் மாணவர் சங்கத் தலைவர் முனைவர் சு.கற்ப கம் குமர சுந்தரி வரவேற்புரையாற்றினார்.
2011 முதல் 2019 வரை மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் பிரிவில் பயின்ற 26 மாணவர்கள் இக்கூட்டத்தில் பங்கு கொண்டு சிறப்பித்தனர். பெரியார் மருந்தி யல் கல்லூரியில் பயின்றோம் என்ற ஒரே காரணத்தினாலேயே அரசுத்துறைகளில் பணிவாய்ப்பில் முன்னுரிமை பெற்றோம் என்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயின்றவர்களுக்கு மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பத்தில் சிறந்த அனுபவம், பணியில் முழு ஈடுபாடு, அர்ப்பணிப்போடு பணி செய்தல், தைரியம், துணிச்சல் மற் றும் தன்னம்பிக்கை போன்றவை அதிகம் இருப்பதாக அனைவரும் தெரிவித்தனர்.
பெண்களுக்கு தொழிற்கல்வி
மேலும் பெண்களுக்கு தொழில் கல்வி வேண்டும் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் சிந் தனைகளுக்கு ஏற்ப அரசுத்துறை களிலும் மருத்துவமனைகளிலும் பெண் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர்களாக தாங்கள் சிறப்பாக பணியாற்றிவருவதாக தெரிவித்தனர். மேலும் தாம் படிக் கக்கூடிய காலத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனர் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காலையில் நடைபயிற் சிக்கு வரும்பொழுது நாங்கள் எடுத்துக்கொள்ளும் காலை சிற் றுண்டி தரமானதாக சுவையான தாக இருக்கிறதா எனபதனை ஆய்வு செய்ய, அவர்களும் அதே உணவை நின்று கொண்டே சாப் பிட்டது எங்களது நினைவுகளில் இன்றும் நீங்காமல் நிற்கின்றது. இப்படி ஒரு தலைவரை, எளிமை யானவரை பார்ப்பது மிகவும் கடினம் என்று மாணவிகள் தெரிவித்தனர்.
மனிதநேயம்
கல்லூரி எங்களுக்கு கற்றுத் தந்த நேர நிர்வாகம், சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய பாதுகாப்பு, எதையும் நேர்த்தியுடன் துல்லிய மாக செய்வது, கீழ்ப்படிதல், எதிர்த்து கேள்வி கேட்பதற்கு பயம் கொள்ளாமல் கேள்வி கேட் பது, எல்லாவற்றிற்கும் மேலாக மனிதநேயத்துடன் நடந்து கொள் வது போன்ற குணநலன்களே கரோனா சூழ்நிலைகளில் தைரிய மாக, சிறப்பாக பணிகளை செய்ய வும், பணியிடங்களில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் என்றால் தவறு நடக்க வாய்ப்பி ருக்காது என்று சொல்லும் அள விற்கு பணியாற்றி வருகிறோம் என்பதனை மெய்சிலிர்க்கும் வித மாக மேடையில் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
தந்தை பெரியாருக்கு நன்றி
மேலும் தாங்கள் இந்நிலைக்கு உயர்ந்தமைக்கு தந்தை பெரியார் அவர்களுக்கு முதல் நன்றியினை யும் பெரியார் மருந்தியல் கல்லூரி யின் நிர்வாகத்திற்கும், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை குறிப்பாக துறைத்தலைவர் பேராசிரியர் க. உமாதேவி மற்றும் பயிற்றுவித்த ஏனைய பேராசிரியர் களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேனாள் மாணவர்கள் 26 பேர் தாம் பயின்ற துறைக்கு பயன்படும் விதமாக ரூ.50,000அய் நன்கொடையாக வழங்கினர். பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ ஆய் வுக்கூட தொழில்நுட்பனர் துறைத் தலைவர் பேராசிரியர் க. உமாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் கே. சக்திவேல், மேனாள் மாணவர் சங்க பொறுப்பாளர்கள் முனைவர் எஸ்.சகிலா பானு, பேரா. அ. ஜெய லெட்சுமி மற்றும் பேராசிரியர் எஸ்.சாமலர் ஆகியோர் முன் னிலை வகிக்க செயலாளர் பேரா. ச.இராஜேஷ் நன்றியுரையாற்றினார். மேனாள் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டு மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது