தமிழ்நாடு அரசு வழக்கு நடத்தும் நிலையில் விசாரணையை டில்லிக்கு மாற்றியது அமலாக்கத்துறை!
புதுடில்லி, டிச.27 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணையை டில்லி தலைமையகத்துக்கு அமலாக்கத் துறை மாற்றம் செய்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபு மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்காமல் இருக்க, மதுரை அமலாக்கத் துறை அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங் கியதாக கடந்த 1ஆ-ம் தேதி கைது செய்யப்பட்டார். பிறகு, மதுரை யில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து, ‘‘35 பேர் வாரன்ட் இல்லாமல் சட்ட விரோதமாக அத்து மீறி அமலாக்கத் துறை அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்’ என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குந ருக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. முக்கிய ஆவணங்கள் எத்தனை நகல் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதனால் முக்கிய வழக்குகளில் ரகசியம் காக்கப்பட வேண்டிய சாட்சி களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது மதுரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். லஞ்ச வழக்கில் அங்கித் சிக்கியதால், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கை விசாரிக்க அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு (இசிஅய்ஆர்) செய்தது. இதில், தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு துறை – ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை இடையே மோதல் எழுந் துள்ள நிலையில், அங்கித் மீதான வழக்கில் இரு அமைப்பும் தனித் தனியாக விசாரணை தொடங்கின. இந் நிலையில், அங்கித் மீதான வழக்கை அமலாக்கத் துறை டில்லி தலை மையகத்துக்கு மாற்றியுள்ளது. இதன்மூலம் அங்கித் திவாரியையும், இந்த வழக்கு விசாரணையையும், அமலாக்கத் துறை யிடம் லஞ்ச ஒழிப்பு துறை ஒப் படைக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.