சென்னை, டிச.15 “மக்களாட் சியின் உயரிய கோயிலாகிய நாடாளுமன்ற அவையில் ஏற்பட்ட மிகப்பெரும் பாது காப்பு மீறல் குறித்துக் கேள்வி கேட்பதற்காக மக்கள் பிரதி நிதிகள் தண்டிக்கப்படுது ஏன்? பாஜக தலைமையி லான ஒன்றிய அரசின் இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கு கண்டனத்துக் குரியது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதல மைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது மக்களாட்சிக்கு எதிரானதும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மலினப்படுத்துவதும் ஆகும். பாஜக தலை மையிலான ஒன்றிய அரசின் இந்த சகிப்புத் தன்மையற்ற போக்கு கண்டனத்துக்குரி யது. நாடாளுமன்ற உறுப்பி னர்களின் கருத் துரிமையை நசுக்குவதுதான் நாடாளுமன் றத்தின் புதிய நடைமுறை யாகி வருகிறதா? மக்களாட் சியின் உயரிய கோயிலாகிய நாடாளுமன்ற அவையில் ஏற்பட்ட மிகப் பெரும் பாதுகாப்பு மீறல் குறித்துக் கேள்வி கேட்பதற்காக மக்கள் பிரதிநிதிகள் தண் டிக்கப்படுது ஏன்? 15 நாடாளுமன்ற உறுப் பினர்களின் இடைநீக்கத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று கோருகி றோம். நாடாளுமன்றம் என்பது விவாதத் துக்கான களமாக இருக்கவேண்டுமே ஒழிய, எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்காக இருப்பது அறவே கூடாது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.