புதுடில்லி, டிச.15- நாடாளுமன் றத்தில் நடந்த அத்துமீறல் விவ காரம் குறித்து உள்துறை அமைச் சர் அவையில் பதில் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்.
நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு டில்லியில் நேற்று (14.12.2023) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:- நாடாளுமன்ற பாதுகாப் புக்கு 301 பாதுகாவலர்களுக்கு அனுமதி. இதில் 76 பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். 125 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியாற்றும் 176 பேரில் பாதிபேரை புதிய கட்டடத்தில் பணிபுரிய வைத்துள்ளனர். பழைய கட்டடத்தில் பிரதமர் அலுவலகம் உள்ளது. கட்சி அலுவலகங்கள் உள்ளன.
இங்கு பாதுகாப்பு இல்லை. புதிய கட்டடத்துக்கு தனியாக பாதுகாவலர்கள் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும்.
இப்படி பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யாமல் குளிர்கால கூட்டத்தொடரை ஏன் கூட்ட வேண்டும்?
நடந்த சம்பவத்துக்கு உள் துறை அமைச்சர் வந்து பதில் தர வேண்டும். நாங்கள் நோட்டீசு அளித்திருக்கிறோம். அதை காற்றில் பறக்க விடுகிறார்கள். உள்துறை அமைச்சர் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பாதுகாப்பு குறைபாடு இல்லை என்று எப்படி பாது காப்புத்துறை அமைச்சரால் சொல்ல முடியும்?காலணியில் மறைத்து கியாஸ் குப்பியை கொண்டு வந்தது பாதுகாப்பு குறைபாடு இல்லையா?
அதை கண்டுபிடித்து எடுத் திருக்கவேண்டும் அல்லவா? பாதுகாப்பு குறைபாடு இல்லை என்று அவர் சொல்வது மிகவும் தவறு.
அவையில் நாங்கள் பாது காப்பு இல்லாமல் இருக்கிறோம். மக்களவையில் 14 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளனர். அடுத்து என்ன என்பதை நாளை (இன்று) பார்க்கலாம். அவையில் இல்லாத உறுப்பினர் பெயரை சேர்த்துள்ளனர். எல் லாமே அவசரம் அவசரமாக செய்கிறார்கள். அவசரமாக செய்வதால்தான் தவறு நடக் கிறது. ஆனால் தவறை திருத்து வதற்கு நாங்கள் தயார் என சொல்லமாட்டேன் என் கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை.
இதுவே. பார்வையாளருக்கு கையெழுத்து போட்டுக் கொடுத் தது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் என்ன செய்து இருப்பார்கள்? எதிர்க்கட்சியினர் இல்லாமல் அவையை நடத்த பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.