சிதம்பரம், மார்ச் 24- சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் கழக பேச்சாளர் யாழ் திலீபன் கடந்த 20 நாட்களுக்கு மேலாக உடல் நலம் குன்றி உள்ளார். மருத்துவமனையில் இருந்து தற்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை 22.3.2025 அன்று மேல் குறியா மங்கலம் (புவனகிரி) அவரது வீட்டில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், நூலகர் கண் ணன், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், வடலூர் நடையாளர் கழக நண்பர்கள் வள்ளி மணாளன், குண சேகரன், பாஸ்கர், உத்தண்டி ,வரதராசன், இளங்கோவன் ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக திண்ணைப் பிரச்சாரம் குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் இரணியல் கீழ்வீதி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர்கழக குமரிமாவட்ட தலைவர் இரணியல் உ. சிவதாணு பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார். மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர்கள் பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு பகுத்தறிவு நூல்கள் வழங்கப்பட்டன.