டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல – மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
*ஒப்பந்த பணிகளில் இஸ்லாமியர்களுக்கு
4 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடும் மசோதாவை கருநாடக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*மாநிலப் பாடத்திட்டத்திற்கு பதிலாக ‘சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம். மகாராட்டிரா கல்வி அமைச்சர் சூகசம்; என்.சி.பி. எம்.பி. சுப்ரியா சுலே எதிர்ப்பு.
* தெற்கில் மட்டுமல்ல, ஹிந்தித் திணிப்பு அனைத்து பிராந்திய மொழிகளையும் அச்சுறுத்துகிறது என்கிறார் கட்டுரையாளர் ரோஹின் பட்.
* பெண்ணின் மார்பகங்களை பிடிப்பதையும், பைஜாமாவின் சரங்களை உடைப்பதையும் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம்.
தி இந்து:
* டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தபோது நீதிபதியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. நீதிபதியின் இடமாற்றம் ‘வதந்திகளுடன்’ தொடர்புடையது அல்ல என்று உச்சநீதிமன்றம் மழுப்பல்.
* நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு “திருப்பி அனுப்ப முன் மொழியப்பட்டதற்கு” பதிலளித்த நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம், எங்கள் உயர் நீதிமன்றம் “குப்பைத் தொட்டியா” என்று கேள்வி எழுப்பி யுள்ளது.
தி டெலிகிராப்:
* கட்டணங்களின் மாறும் விலை நிர்ணயம் கார ணமாக, சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருவாய் இழப்பையும் இருக்கைகள் குறைவாகப் பயன்படுத்தப்படுவதையும் சந்தித்தன. அதிக கட்டணங்கள் காரணமாக பயணிகள் விமான பயணத்திற்கு பதிலாக ரயில்வேயை தேர்ந்தெடுப் பதை தவிர்க்கிறார்கள் என நாடாளுமன்றக் குழு அறிக்கை.
– குடந்தை கருணா