சென்னை, மார்ச் 21 பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக் கான பல முன்னெடுப்பு திட்டங்களை தமிழ் நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத் தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத் துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை யும் உறுதிசெய்திடும் பொருட்டு “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” வழங் கும் திட்டம் அறிவிக்கப் பட்டது.பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த் தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.
ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண் களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண் களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் (GPS) பொருத் தப்பட்டிருக்கும். இது அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும். இளஞ்சிவப்பு ஆட்டோ பெறும் பயனாளிகளுக்கு கட்டணங்கள் ஏதுமின்றி (commission) “ஊர் கேப்ஸ்” செயலி பயன்படுத்த வழி வகை செய்து தரப்படும்.
சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு சிஎன்ஜி (CNG) ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்ட மாக தகுதியான பயனாளி களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பன்னாட்டு மகளிர் தினமான 08.03.2025 அன்று இளஞ்சிவப்பு ஆட் டோக்களை மகளிருக்கு வழங்கி இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து சிஎன்ஜி (CNG) ஆட் டோக்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட வுள்ளதால் தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத் தின் கீழ் பயன்பெற 06.04.2025 தேதி வரை விண் ணப்பங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் வர வேற்கப்படுகின்றன.
i. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
ii. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
iii. 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
iv. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
v. சென்னையில் குடி யிருக்க வேண்டும்.
எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுநர்கள், இத் திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பத்தை சென்னை 600 001. சிங்காரவேலர் மாளிகை, 8-ஆவது தளத்தில் செயல்படும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலு வலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 06.04.2025 தேதிக்குள் அனுப்ப வேண் டும். இவ்வாறு கூறப்பட் டுள்ளது.