மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) பல்வேறு தொழில்துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,161 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. சமையல், தையல், பெயிண்டிங், பார்பர், சலவை, தச்சு வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
காலி பணியிடங்கள்: மொத்தமாக 1,161 காலிப்பணியிடங்கள் உள்ளன, இதில் ஆண்களுக்கு 945, பெண்களுக்கு 103, மற்றும் மேனாள் ராணுவத்தினருக்கு 113 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிட விவரங்களைப் பார்க்கும்போது, சமையலாளராக 444, பார்பராக 180, சலவை செய்யுபவராக 236, தூய்மை பணியாளராக 137, தையல்காரராக 21, பெயிண்டராக 2, தச்சராக 8, எலக்ட்ரீஷியனாக 4, மாலியாக 4, வெல்டராக 1, சார்ஜ் மெக்கானிக்காக 1, மற்றும் எம்பி உதவியாளராக 2 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: கல்வித் தகுதியைப் பொருத்தவரை, விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட தொழில்பிரிவில் ITI (Industrial Training Institute) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஊதியம் பெறலாம்
வயது வரம்பு: வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்சம் 23 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய கட்டங்களில் நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ளவர்கள் CISF அதிகாரப்பூர்வ இணையதளம் https://cisfrectt.cisf.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் 05.03.2025 அன்று தொடங்கும் மற்றும் 03.04.2025 அன்று முடிவடையும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.