திருப்பத்தூர், மார்ச் 19- திருப்பத்தூர் மாவட்ட கழக இளைஞரணி தோழர் ரா.சிறீ (எ) கோகுல்ராஜ் – கு.ஸ்ருதி (எ) கவிதா ஆகியோரின் இணை ஏற்பு நிகழ்வு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் 11.03.2025 அன்று மாலை 6.00 மணிக்கு திருப்பத்தூர் மாணிக் கம் மகாலில் நடைப்பெற்றது.
வாழ்க்கை இணை ஏற்பு உறுதி மொழியை மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் வாசிக்க இணையர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
வாழ்விணையர்களை வாழ்த்தி திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய வாழ் வியல் சிந்தனைகள் புத்தகமும், தந்தை பெரியார் ஒளிப்படமும் வழங்கப்பட்டது. விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் பெண் ஏன் அடிமையானாள்? புத்தகம் வழங்கப்பட்டது.
முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்தவர்களை மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன் வரவேற்றார். மேலும் இந்நிகழ்வில் மாநில மகளிரணி பொருளாளர் எ. அகிலா, மாநில பகுத்தறிவா ளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாவட்ட துணைத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வே. அன்பு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைப் செயலாளர் கோ. திருப்பதி, மாவட்ட துணைச் செயலாளர் ஏ. டி. சித்தார்த்தன், சோலையார்பேட்டை நகர அமைப்பாளர் இரா.இராஜேந் திரன்,கந்திலி ஒன்றியத் தலைவர் பெ. ரா. கனகராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சி. சுரேஷ்குமார், மாவட்ட மகளிரணி தலைவர் இரா. கற்பகவல்லி, ஏலகிரி கழக தோழர் பச்சைமுத்து ஆகியோர் பங்கேற்று வாழ்விணையர்களை வாழ்த்தினார்கள்.
இரா. கோகுல் ராஜ், கு. கவிதா ஆகியோர் தங்கள் வாழ்க்கை இணையேற்பின் மகிழ்வாக பெரியார் உலகிற்கு 1000 ரூபாயை நன்கொடையாக மாவட்டத் தலைவரிடம் வழங்கினர்.