கன்னியாகுமரி, மார்ச் 19- கன்னியாகுமரி மாவட்ட சார்பாக கழக மேனாள் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணி யம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட் டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார். அன்னையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப் பட்டது.
மாவட்ட காப்பாளர் ஞா.பிரான்சிஸ், பொதுக் குழு உறுப்பினர் மு இராஜசேகர், கோட்டாறு பகுதி கழக தலைவர் ச.ச.மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். கழக மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக் சாண்டர், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், கழகத் தோழர்கள் மு.குமரிச் செல்வன், பா.சு. முத்து வைரவன், ஆன்டனி பெனடிக்ட், இரா.முகிலன் மற்றும் பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.