பெரியகுளம், மார்ச் 19- பெரியகுளத்தில் உலக மகளிர் தின விழா நாள் 16.3.2025 அன்று மாலை 6. மணி அளவில் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரத்தில் பகுத்தறிவாளர் கழகம் நம்மால் முடியும் நல சேவை சங்கம், வழக்கறிஞர் சங்கமம் சார்பாக பல்வேறு துறைகளில் சேவை புரிந்து சாதனை புரிந்த மகளிருக்கு பாராட்டு மற்றும் பரிச ளிப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் இரண்டு பெண் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இலவசமாக மாணவ மாணவிகளுக்கு கல்வி பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஒருவர் குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவை அ.மாரி முத்து தலைவர், கிளைச் செயலாளர், பக. தலைமையேற்று நடத் தினார்.
இப்ராஹிம் பாட்ஷா கிளைத் தலைவர் ப.க. கவுரவ தலைவர், வரவேற்புரை நிகழ்த்தி னார்.அ.மோகன் மாவட்ட செயலாளர் பக. முன்னிலை வகித்தார்.
முத்துவேல் பாண்டிய ராஜன் எ.கண்ணன், நகர அமைப்பாளர் கருப்பண்ணன், மாவட்ட பொருளார் கலந்து கொண்டு அனைவரையும் பாராட்டி பரிசளித்தனர்.
ஆறுமுகம் நகர தலைவர், பக கள்ளிப்பட்டி கபிலன் தலைவர் பக. துரைப்பாண்டி துணைச் செயலாளர் பக. சையது சுல்தான் துணை தலைவர். செந்தில்குமார், ரேவதி, ஜெயந்தி, கனகு, சுதாகர் செயலாளர் வழக்கறிஞர் சங்கம் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், பொது மக்கள் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு பகுத்தறிவு உரைகளை மிக கவனத்தோடு கேட்டு மகிழ்ந்தனர்.
நிறைவாக காமராஜ்.பொருளாளர் பக. தலை வர், வழக்கறிஞர் சங்கம் நன்றியுரை ஆற்றினார்.