முன்னிட்டு நேற்று (18.03.2025) அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் மேயர் பிரியா ராஜன் ஏற்பாட்டில் 18 கல்லூரிகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற “தமிழ்மகள்”என்னும் மாபெரும் சொற்போரில் முதலிடம் பிடித்த கொளத்தூர் அனிதா அச்சிவர்ஸ் அகாடெமியை சேர்ந்த மாணவி துர்கா ரூ.1 இலட்சமும், இரண்டாம் இடம் பிடித்த டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி மாணவி கயல்விழி ரூ.75,000 மும் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி மாணவி லிகிதா ரூ.50,000மும் பரிசாக அளிக்கப்பட்டு, பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ‘தமிழ்மகள்”’ கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேனாள் நீதியரசர் செல்வி கே.பி.கே.வாசுகி, மேனாள் நீதியரசர் எஸ்.ஆனந்தி, மேனாள் நீதியரசர் டாக்டர் எஸ்.விமலா, சொற்பொழிவாளர் பாரதி பாஸ்கர், Femi9 நிறுவனர் டாக்டர் கோமதி, பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா , மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், நகரமைப்பு குழு உறுப்பினர் ராஜேஸ்வரி சிறீதர், சுகாதார நிலைக்குழு உறுப்பினர் புனிதவதி எத்திராசன், மாமன்ற உறுப்பினர் சுதா தீனதயாளன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.