தந்தை பெரியாரின் 146-ஆம் பிறந்தநாள் விழா

PERIYAR VISION OTT நடத்தும்

பெரியார் இசை

முதல் பரிசு

ரூ.25,000

இரண்டாம் பரிசு

ரூ.15,000

மூன்றாம் பரிசு

ரூ.10,000

சிறப்பு, ஊக்கப்பரிசுகள் உண்டு.

போட்டிக்கான விதிமுறைகள்

1

தந்தை பெரியாரின் தொண்டு, பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி, மூடநம்பிக்கை ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிரதிபலிப்பதாக பாடல்கள் இருத்தல் வேண்டும்.

2

பாடல் தங்களது சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.

3

பிறரால் பதிப்புரிமை பெறப்பட்ட காட்சிகளையோ, இசையையோ கொண்டிருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

4

பாடலின் கால அளவு 3 முதல் 6 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். அனுப்பிய பின் இந்த இணைப்பில் பதியவும்

5

படைப்பாளர்கள் தங்களது படைப்புகளை High Definition (MP4) வடிவத்தில் Google Drive-இல் பதிவேற்றம் செய்து அதற்கான இணைப்பை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்பிய பின் இந்த இணைப்பில்( Google Form Registration Link) தங்கள் விவரங்களை பதியவும்.

6

ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்களை போட்டிக்கு அனுப்பலாம்.

7

இசையமைப்பாளர், பாடகர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், பாடல் ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

8

பாடலின் முன்னோட்ட வீடியோ (Promo Video), பாடல் சார்ந்த ஒளிப்படங்கள் (Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன.

9

போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதத்தை பாடலின் உரிமையாளர் வழங்க வேண்டும்.

10

பாடல்கள் 2023 - 2024 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும். YOUTUBE அல்லது வேறு எந்த தளங்களிலும் பாடலைப் பதிவேற்றம் செய்திருக்கக் கூடாது. பாடல்களை உலகெங்கும் எல்லா காலத்திலும் ஒளிபரப்ப PERIYAR VISION OTT-க்கு உரிமை உண்டு (A Worldwide Non-Exclusive Perpetual Rights). போட்டி முடிந்ததற்குப் பிறகு படைப்பாளர் / தயாரிப்பாளர் வேறு தளங்களில் பாடலை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

11

போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பாடல்கள் அனைத்தும் PERIYAR VISION OTT-இல் பதிவேற்றம் செய்யப்படும். வாக்கெடுப்பு மற்றும் நடுவரின் தீர்ப்பின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும்.

12

தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

13

போட்டி முடிவுகள் PERIYAR VISION OTT - இன் சமூக வலைதளப் பக்கங்கள், விடுதலை, உண்மை இதழ்களிலும் பிற நாளிதழ்களிலும் செய்தியாக 2024 செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும்.

14

போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.

15

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: செப்டம்பர் 25, 2024.

இணைந்து நடத்துவோர்: பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை
மேலதிக விவரங்களுக்கு தொடர்புக்கு : 739 589 1099, 99 404 89 230