புதுடில்லி, நவ.22- டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் எம்.ஆர்.அய். ஸ்கேன் செய்வதற்காக சென்ற நோயாளிக்கு 3 ஆண்டுகள் கழித்து தேதி கொடுக்கப்பட்டுள்ளது.
டில்லியை சேர்ந்த ஜெய்தீப் தே (வயது 52) என்பவர் வலது கால் காயத்துக்கு சிகிச்சைப் பெறுவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு சென்றுள்ளார்.
ஆனால், எம்.ஆர்.அய். ஸ்கேன் எடுப்பதற்கான தேதி 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 15,000 புறநோயாளிகள் சிகிச்சைக் காக வருகின்றனர். அவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு எம்.ஆர்.அய். ஸ்கேன், எக்ஸ்-ரே போன்றவை எடுக்கப் படுகின்றன.
இதனால், புறநோயாளி களுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களில் இருந்து 3 ஆண்டுகள் வரை உள்ளதாக மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து ஜெய்தீப் கூறுகையில், “டில்லி மற்றும் வலையப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் எம்.ஆர்.அய். ஸ்கேனுக்கு ரூ. 25,000 வரை கேட்கின்றனர், ரூ. 5,000 கூட செலவழிக்க முடியாது நிலையில் நான் உள்ளேன். என்ன செய்வதென்று தெரியாததால், ஸ்கேன் எடுக்கும் முடிவையே கைவிட்டுவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை யில் எம்.ஆர்.அய். ஸ்கேன் ரூ. 2,000 முதல் ரூ. 3,000-க்குள் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை தரப் பில் கூறுகையில், “ஸ்கேன் எடுக்க அதிகளவிலான நோயாளிகள் வரு வதால் நேரம் நீட்டிக் கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் உடனடி ஸ்கேன் தேவைப் படுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நோயின் தீவிரத் தன் மைக்கு ஏற்ப பிற உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு காத்திருப்பு காலம் வழங் கப்படுகிறது” எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையின் அவலம் ‘ஸ்கேன்’ எடுக்க 3 ஆண்டு கழித்து வா என்று கூறிய எய்ம்ஸ் நிர்வாகம்
Leave a Comment