நிலத்தடி நீர்மட்டம்
கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த அக்டோபர் மாதத்தில் கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், நீலகிரி, சிவகங்கை, தேனி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மீதமுள்ள 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
மின் மீட்டர்
தமிழ்நாட்டில் விவசாயம், குடிசை வீடு தவிர மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க பயன்படுத்ப்படும் மின் மீட்டர் தட்டுப்பாட்டை நீக்க, ஒரு முனை பிரிவில், 12 லட்சம் புதிய மீட்டர்களை வாங்க 6 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 40,000 மீட்டர்கள் உள்ளன. கிடங்குகளில் ஏற்கெனவே மும்முனை பிரிவில் 60,000 மீட்டர்கள் கையிருப்பில் உள்ளன என மின் வாரிய அதிகாரிகள் தகவல்.
கல்லூரி விடுதி…
சென்னையில் தொடங்கப்படும் சிறுபான்மையினர் நலக்கல்லூரி விடுதியில் தங்கி பட்டப்படிப்பு, தொழிற்கல்வி போன்றவற்றை பயில சிறுபான்மையின மாணவர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
இணையத்தில்…
நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையத்தில் பதிவேற்ற கடந்த 8ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது வரும் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு…
வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத 3 லட்சத்து 50 ஆயிரம் கட்டடங்களில் அதை உருவாக்குவதற்கான பணிகளில் சென்னை குடிநீர் வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
முடிவுகள்
தமிழ்நாடு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் முகவரி
பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருககும் மின்னஞ்சல் முகவரி இருப்பது கட்டாயமாகிறது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் (2024-2025) 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இமெயில் முகவரியை வகுப்பாசிரியர்கள் உதவியுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைதது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
செய்திச் சுருக்கம்
Leave a comment