1700களில் அய்க்கிய அமெரிக்கா முழுவதும்
வசித்த பூர்வகுடிகளான சிவப்பிந்தியர்கள்
மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஜைமைக்கா உள்ளிட்ட தீவுகள் வழியாக உள்ளே நுழைந்த அய்ரோப்பியர்கள் முதலில் மத்திய அமெரிக்க கண்ட நாடுகளான கியூபா, ஈக்வடார், ஹண்டுராஸ், பனாமா, மெக்சிகோ வழியாக இன்றைய அமெரிக்க அய்க்கிய ராஜ்ஜியத்தில் நுழைந்தனர்.
1770களுக்கு முன்பு முழுமையான அமெரிக்க அய்க்கிய ராஜ்ஜியம் சிவப்பிந்தியர்களின் கட்டுப்பாட்டில் சில பெரிய மாகாணங்களாக இருந்தது, பின்னர் மெல்ல மெல்ல அய்ரோப்பியர்கள் இன்றைய அய்க்கிய அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியார்கள் நுழைந்த அதே காலகட்டம். மெல்ல மெல்ல அமெரிக்காவை கபளீகரம் செய்த அய்ரோப்பியர்கள். பூர்வீக மக்களை விலங்குகளைப் போல் வேட்டையாடத் துவங்கினர். செவ்விந்தியர்களை வேட்டையாடிக்கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு உடலுழைப்பிற்கு ஆட்கள் தேவைப்படவே கப்பல் கப்பலாக கறுப்பினத்து மக்களை அடிமாடுகளைப் போல் அடிமைகளாக விலைக்கு வாங்கி அமெரிக்கா கொண்டு வந்தனர். அங்கு அவர்கள் மிகவும் கொடூரமான அடக்குமுறைக்கு ஆளானார்கள்.
கறுப்பினமக்களை சித்திரவதை செய்து கொலை செய்வதை பல அய்ரோப்பிய முதலாளிகள் பொழுதுபோக்காகவே வைத்திருந்தனர்.
1800களில் அய்ரோப்பியர்கள் ஆக்ரமித்த பின்
சுருங்கிப் போன பூர்வகுடிப் பரம்பல்
அங்கு ஏற்கெனவே வாழ்ந்தவந்த சிவப்பிந்தியர்களும் பெருவாரியாக கொல்லப்பட்ட நிலையில் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு எந்த ஒரு மனிதாபிமான உதவிகளும் கிடைக்காமல் சுமார் 3 நூற்றாண்டுகள் கொடுமைகளை அனுபவித்தனர்.
இன்று வந்தேறிகளை விரட்டுவோம் என்று கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்திருக்கும் டொனால் டிரம்பின் மூதாதையர்களும் 200 ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்தில் இருந்து அடிமை வணிகம் செய்ய அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள் தான்.
1900த்திற்குப் பின் இன்று வரை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு மறைந்து போன பூர்வகுடிகள்
இன்று அமெரிக்காவில் அந்த பூர்வீக மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்றால், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ நகரத்தில் சில மீனவர் கிராமங்களிலும் அதற்கு அருகில் உள்ள அரிசோனா மாகாணத்தில் கொலராடோ நதியின் கரையில் உள்ள சிறிய கிராமமான ஒரு தீவில் மட்டுமே வாழ்கின்றனர்