சென்னை, நவ.7- தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க ஆணைகளை செயல்படுத்த ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவில் (AI) ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, மாநில அரசு விரைவில் “தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை” (TNAIM) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்த உள்ளது.
முன்கணிப்பு கொள்கை உருவாக்கம், திறன் மேம்பாடு, திறன் மற்றும் கல்வி, சமூக ஒத்துழைப்பு, ஸ்டார்ட்-அப்களை ஈடுபடுத்துதல், புத்தாக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய AI கிடைப்பதை எளிதாக்குவதன் மூலம் கணக்கீடு மற்றும் சேமிப்பிற்கான உள்கட்டமைப்பை வழங்குதல் ஆகியவற்றில் AI கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் TNAIM கவனம் செலுத்தும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், TNAIM இல் முன்னணி கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்கள், AI துறையைச் சேர்ந்த தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் இணைக்கப்பட்ட தொழில்துறையைச் சேர்ந்த முன்னணி நபர்களும் இருப்பார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை முன்னணி செயற்கை நுண்ணறிவு மய்யங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18,000 போலி நிறுவனங்களை உருவாக்கி ரூ.25,000 கோடி ஜி.எஸ்.டி. ஏய்ப்பு!
மும்பை, நவ. 7- சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி) பதிவு செய்யப்பட்ட 18,000 போலி நிறுவனங்கள் சுமார் 25,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது நாடு முழுவதும் உள்ள போலி நிறுவனங்களுக்கு எதிராக அண்மையில் நடந்து முடிந்த நடவடிக்கையில், எந்த வா்த்தகத்திலும் ஈடுபடாமல் உள்ளீட்டு வரி திரும்பப் பெறுதலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட 73,000 நிறுவனங்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்தனா். இதில் சுமார் 18,000 நிறுவனங்கள் போலி என்பது தெரிய வந்தது. மேலும், அந்நிறுவனங்கள் சுமார் ரூ.24,550 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த சிறப்பு நடவடிக்கையின்போது நிறுவனங்கள் ரூ.70 கோடி ஜிஎஸ்டி பாக்கியை செலுத்தின.
போலியான ஜிஎஸ்டி பதிவை சரிபார்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாடு தழுவிய இரண்டாவது கட்ட நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் இறுதி வரை தொடா்ந்தது.
கடந்தாண்டு மே முதல் ஜூலை வரை நடைபெற்ற முதல் கட்ட நடவடிக்கையில் ஜிஎஸ்டி பதிவைக் கொண்ட மொத்தம் 21,791 போலி நிறுவனங்கள் சுமார் ரூ.24,010 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்யதுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.1,20,000 ஊதியத்தில் பவர்கிரிடு நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளர் வேலை!
பெங்களுரு, நவ. 7- பொதுத்துறை நிறுவனமான மின் பகிர்மான கழகமான பவர்கிரிடு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பயிற்சிப் பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்பளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.CC/09/2024 பணி: Trainee Supervisor மொத்த காலியிடங்கள்: 70
சம்பளம்: மாதம் ரூ.24,000 – 1,08,000
வயது வரம்பு: 6.11.2024 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்(பவர்), பவர் சிஸ்டம், பவர் இன்ஜினியரிங் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் குறைந்தது 70 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை மூலம் படிப்பை முடித்தவர்கள், தொலைத்தூர் கல்வி முறையில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் விண்ணப்பத்தாரரின் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னை, பெங்களூருவில் நடைபெறும். தேர்வு உத்தேசமாக 2025 ஜனவரியில் நடத்தப்படலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படும்.