புதுச்சேரி ஜிப்மரில் செவிலியா் (பிஎஸ்சி) மற்றும் அலைடு ஹெல்த் சையின்ஸ் படிப்புகளுக்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஜிப்மர் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஜிப்மரில் செவிலியர் (பிஎஸ்சி) படிப்புக்கு மகளிர் 85, ஆடவா் 9 என மொத்தம் 94 இடங்கள் சோ்க்கப்படவுள்ளன. மேலும், அலைடு ஹெல்த் சையின்ஸ் பாடப்பிரிவுகளில் 87 இடங்களுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது.
எனவே, ஜிப்மரில் செவிலியா் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தோ்வு அடிப்படையில் நடைபெறும் மாணவா் சோ்க்கைக்கு ஜிப்மா் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அக். 24-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அடிப்படையில் வரும் நவம்பா் 8-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக மாணவா் சோ்க்கைப் பட்டியல் ஜிப்மா் இணையத்தில் வெளியிடப்படும். மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்குப் பிறகு நவம்பா் 25-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.