புதுவை, அக்.29- புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய சுயமரியாதைச் சுடரொளி எஸ்.என்.சாமிநாதன் நினைவு நாள், தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் கவியரங்கம் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் 26.10.2024 அன்று நடைபெற்றது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் தலைமையில் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.குமரன் வரவேற்புரை ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் , துணைத் தலைவர் இரா. சத்தியராஜ் ஆகியோர் முன்னிலையில் தந்தை பெரியார் படத்தினை புதுச்சேரி திராவிடர் கழகத் துணைத் தலைவர் மு. குப்புசாமி திறந்து வைத்தார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தினை மாவட்டக் கழகத் தலைவர் வே.அன்பரசன் திறந்து வைத்தார்.
“பாரதிதாசன் பாடல்களில் பகுத்தறிவு ” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் கவிஞர் புதுவைப் பிரபா தலைமை ஏற்று கவிதை வாசித்தார். கவிஞர்கள் சிவ.விஜயபாரதி, இரா.கருணாநிதி, ஜெ.வாசுகி, இவோன் கிறிஸ்டின், நா.விடுதலை நம்பி ஆகியோர் தனித்தனியாக கவிதை வாசித்தனர். நா.இலட்சுமி ஒருங்கிணைத்தார்.
விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்.
கழகக் காப்பாளர் இர. இராசு, பொதுக்குழு உறுப்பினர் விலாசினி ராசு, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச் செல்வன், திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் தி.இராசா, கொம்யூன் பொறுப்பாளர்கள் சு.துளசிராமன், செ.இளங்கோவன். இரா.ஆதிநாராயணன், பி.அறிவுச்செல்வன், ஏம்பலம் தெ.தமிழ் நிலவன், இர.சாம்பசிவம், க.ஜெயந்தி, ம.இளங்கோவன், பாகூர் பொ.தாமோதரன், இரா.வீராசாமி, அ.ச.தினா, ஆனந்தி தினா மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பிறந்த நாள் காணும் ஆ.சிவராசனுக்கு கைத்தறி ஆடைகள் அணிவிக்கப் பட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அறிவுவழி காணொளி இயக்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ந.தாமோதரன் நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்பினார்.
பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்களை பகுத்தறிவாளர் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் நன்றி தெரிவித்தார்.