காங்கிரஸ் தலைவராக 2 ஆண்டுகள்: கார்கேவுக்கு ராகுல் வாழ்த்து
காங்கிரஸ் தலைவராக 2 ஆண்டு நிறைவு செய்துள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கார்கே இல்லத்திற்கு சென்ற ராகுல், பூங்கொத்து கொடுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். கார்கே தலைமையில் காங்கிரஸ் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்வதாகவும் தனது பாராட்டுகளை தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவ ராக கார்கே பொறுப்பேற்றுக் கொண்டார்.
சண்டை நிறுத்தத்திற்கு தயார்
– இஸ்ரேல் அறிவிப்பு
சண்டை நிறுத்தத்திற்கு எப்போதும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவான் அஜார், இஸ்ரேலில் தாக்குதல் நடத்தினால் அதற்கு விலை கொடுத்துதான் ஆக வேண்டும் என்று குறிப்பிட்டார். பிணைக் கைதிகளை விடுவித்து ஆயுதத்தை ஹமாஸ் கீழே போட்டால் சண்டை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தயார் என்றும் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும்
சுங்கக் கட்டணம் இல்லை..!
விழாக்காலத்தை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை வருவ தால் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். இந்த நேரத்தில், சுங்கச்சாவடிகளில் பெருமளவில் நெரிசல் ஏற்படும். இதன் காரணமாக, தமிழ்நாடு அரசின் பரிந்துரையின் பேரில் 29, 30 தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்தால், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தவிருங்கள் என நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மீனவர்கள்
12 பேர் சிறைப்பிடிப்பு
தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நெடுந்தீவு அருகே கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை படகுடன் சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் செயலால் தமிழ்நாட்டு மீனவர்கள் கவலை அடைந்துள்ள நிலையில், ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
EPFO நம்பர் தெரியலையா?
இதை செய்யுங்க போதும்
EPFO UAN நம்பரை சிலர் மறந்து இருப்பர். அதை நினைத்து கவலைப்பட வேண்டாம். EPFO கணக்கில் பதிவு செய்தஅலைபேசி எண்ணில் இருந்து, EPFOHO TAM என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பியதும், உங்கள் எண்ணுக்கு EPFO UAN எண், பண இருப்பு குறுஞ்செய்தியாக வரும். அதேபோல், 01122901406 எண்ணுக்கு missed கால் செய்தாலும் UAN எண், பண இருப்பு விவரம் குறுஞ்செய்தியாக உங்கள் எண்ணுக்கு வரும்.
செயலி மூலம் பணம் திருட்டு?
விமானப் பயணிகள் தங்கள் பயணம் சிரமம் இல்லாமல் இருக்க வழிதேடுவது உண்டு. அதுபோன்ற நபர்களை குறிவைத்து, Lounge pass செயலி மூலம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை அறியாமல் சிலர் அந்த செயலியை பதிவிறக்கினால், அலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தி அழைப்பு உள்ளிட்டவற்றை கண்காணித்து, அதைவைத்து வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தானாக செயலி திருடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலை மீண்டும் தாக்காமல் இருக்க ஈரான் நிபந்தனை
இஸ்ரேலை மீண்டும் தாக்காமல் இருக்க ஈரான் நாடு நிபந்தனை விதித்துள்ளது. அக். 1இல் ஈரான் நடத்திய ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் மீண்டும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் தொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் தாக்காமல் இருக்க காசா, லெபனானில் இஸ்ரேல் சண்டை நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்சில் வெள்ளம்,
நிலச்சரிவிற்கு 126 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டில் ட்ராமி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு 126 பேர் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸின் வடமேற்கு பகுதியில் ட்ராமி புயல் 25.10.2024 அன்று கரையை கடந்தது. இதனால் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை சீற்றத்தில் பலர் காணாமல் போயுள்ளதால், பலி உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஒன்றிய அரசில் 600 பணியிடங்கள்
பேங்க் ஆப் மகாராட்டிராவில் காலியாக உள்ள 600 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Apprentices பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, வயது வரம்பு: 20-28. இணையம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ. 24. கூடுதல் விவரங் களுக்கு இந்த BOM முகவரியை கிளிக் செய்யவும்.