டில்லி விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர் ஒருவர் – பிரியங்கா காந்தியிடம், “நான் கேரளாவைச் சேர்ந்தவன், நான் ஊருக்குச் செல்லும் போது எல்லாம் எனது அம்மா குறிப்பாக உங்களைக் கேட்டு நலம் விசாரித்து நீண்ட ஆயுள் வாழ வாழ்த்துவார்.
பல தலைவர்கள் இருக்கும்போது குறிப்பாகப் பிரியங்கா காந்தி மட்டும் எதற்கு எனக்கேட்டால், “எங்கள் வீட்டுப் பெண் போல் இருக்கிறாங்க” என்று அந்த தாய் கூறியதாக பிரியங்கா காந்தியிடம் கூறியிருந்தார். இந்த நிகழ்வு எப்போதோ நடந்தது.
வயநாட்டில் போட்டியிட மனுதாக்கல் செய்யச் சென்ற பிரியங்கா காந்தி அந்த வீரரின் வீட்டிற்குச் சென்று தனக்காக வாழ்த்து தெரிவித்த அந்த அம்மாவைச் சந்தித்துப் பேசி அவர்களோடு ஒளிப்படம் எடுத்துக் கொண்டார்.
நம்ம வீட்டுப் பெண்!
Leave a comment