என்.டி.பி.சி.-இல் வேலைவாய்ப்பு
உடனே விண்ணப்பியுங்கள்
ஒன்றிய அரசின் NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஜூனியர் executives பதவிகளில், ஓராண்டு கால பணிகால அடிப்படையில் 50 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் SC பிரிவினருக்கு 7. ST பிரிவினருக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 28ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்கள்.
யமுனையில் ரசாயனம்
பா.ஜ.க. மீது அதிஷி தாக்கு
யமுனை நதியில் ரசாயன நுரை பொங்கிவர பாஜகவே காரணம் என்று டில்லி முதலமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக ஆட்சி நடைபெறும் அரியானா, உ.பி.யில் உள்ள ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவு திறக்கப்படுவதால் யமுனைந்தி மாசடைந்து விட்டதாகவும் சாடியுள்ளார். டில்லியில் காற்று மாசு, தண்ணீர் மாசு ஏற்படுவதற்கு பாஜகவின் மோசமான அரசியலே காரணம் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அய்.டி.அய். மாணவர் சேர்க்கை
கால அவகாசம் நீட்டிப்பு
அய்.டி.அய்.-களில் மாணவர்களின் நேரடி சேர்க்கை அக்.30 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 2024-2025ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான இறுதிநாள் செப்.30 வரை இருந்த நிலையில், அக். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு அய்.டி.அய்.-களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது. மேலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ₹750, மிதிவண்டி, சீருடை, பயிற்சி கருவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.