திருச்சி, அக்.17- திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய “Pharma Technology: Empowering Education, Innovation and Collaboration” என்ற உலகளாவிய கல்வி மற்றும் தொழில்துறை மாநாட்டில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறைத்தலைவர் முனைவர் இரா.இராஜகோபாலனின் வழிகாட்டுதலில் இளநிலை மருந்தியல் நான்காமாண்டு மாணவி யு.கீர்த்திகா ‘Pongamia pinnata’ என்ற தாவரத்தின் விதையிலிருந்து பெறப்பட்ட எண்ணெய் சொரியாசிஸ் நோயினை குணப்படுத்தும் என்ற தமது ஆய்வினை வாய்மொழி ஆராய்ச்சிக் கட்டுரையாக சமர்ப்பித்தார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து 42க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் மாணவி யு.கீர்த்திகா இரண்டாம் பரிசினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பரிசு வென்ற மாணவியை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
கல்லூரியின் முதுநிலை மருந்தியல் மற்றும் மூன்றாமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர்கள் நான்கு பேர் இம்மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.