புதுடில்லி, அக்.15 ஆற்றுப் படுகைகள், அனைத்து நதிகள், நீா்வழித்தடங்கள் மற்றும் அதன் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்த சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான வழக்கில் பதில் அளிக்குமாறு ஒன் றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (14.10.2024) தாக்கீது அனுப்பியது.
நாட்டின் ஆற்றுப் படுகைகள், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிர மிப்புகளை இடித்து அவற்றை மீட் டெடுக்க உத்தரவிட கோரி மேனாள் அய்பிஎஸ் அதிகாரி அசோக் குமாா் ராகவ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அமா்வு முன் இந்த மனு நேற்று (14.10.2024) விசாரணைக்கு வந்தது. மனுதாரா் சாா்பில் ஆஜ ரான வழக்குரைஞா் ஆகாஷ் வசிஷ்தா முன்வைத்த வாதத்தில், ‘நாடு முழுவதும் சட்டவிரோத கட் டுமானங்கள் அதிகரித்து வருகிறது. இதுவே பேரழிவுக்கு மிகமுக்கியக் காரணமாக உள்ளது’ என்றாா்.
இந்த மனு மீது 3 வாரங்களில் பதில் அளிக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், ஒன்றிய நீா் ஆணையம் மற்றும் ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.
உச்சநீதிமன்றத்தில் கரோனா தடுப்பூசி எதிர்ப்பு மனு தள்ளுபடி
புதுடில்லி, அக்.15 உச்சநீதிமன்றம் கரோனா தடுப்பூசிக்கு எதிராக அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாக கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. ஆயினும் இதனை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,
“கரோனா தடுப்பூசிகளால் எந்தவித பயன்களும் கிடையாது. அது பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு நடவடிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண் டும்” எனக் கோரப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது “இதுபோன்ற மனுக்களை எதன் அடிப்படையில் தாக்கல் செய்கிறீர்கள் ? மனுவின் சாராம்சம் என்பது பரபரப்பை ஏற்படுத்துவதற்காவே இருப்பது போன்று உள்ளது. கோவிட் தடுப்பூசி மட்டும் இல்லாவிட்டால், எதுபோன்ற பக்கவிளைவுகள் நமக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை மனுதாரர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே முகாந்திரம் இல்லாத இந்த மனுவை விசாரிக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.நீா்வழித்தடங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, அக்.15 ஆற்றுப் படுகைகள், அனைத்து நதிகள், நீா்வழித்தடங்கள் மற்றும் அதன் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்த சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான வழக்கில் பதில் அளிக்குமாறு ஒன் றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (14.10.2024) தாக்கீது அனுப்பியது.
நாட்டின் ஆற்றுப் படுகைகள், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிர மிப்புகளை இடித்து அவற்றை மீட் டெடுக்க உத்தரவிட கோரி மேனாள் அய்பிஎஸ் அதிகாரி அசோக் குமாா் ராகவ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அமா்வு முன் இந்த மனு நேற்று (14.10.2024) விசாரணைக்கு வந்தது. மனுதாரா் சாா்பில் ஆஜ ரான வழக்குரைஞா் ஆகாஷ் வசிஷ்தா முன்வைத்த வாதத்தில், ‘நாடு முழுவதும் சட்டவிரோத கட் டுமானங்கள் அதிகரித்து வருகிறது. இதுவே பேரழிவுக்கு மிகமுக்கியக் காரணமாக உள்ளது’ என்றாா்.
இந்த மனு மீது 3 வாரங்களில் பதில் அளிக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், ஒன்றிய நீா் ஆணையம் மற்றும் ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.
உச்சநீதிமன்றத்தில் கரோனா தடுப்பூசி எதிர்ப்பு மனு தள்ளுபடி
புதுடில்லி, அக்.15 உச்சநீதிமன்றம் கரோனா தடுப்பூசிக்கு எதிராக அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாக கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. ஆயினும் இதனை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,
“கரோனா தடுப்பூசிகளால் எந்தவித பயன்களும் கிடையாது. அது பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு நடவடிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண் டும்” எனக் கோரப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது “இதுபோன்ற மனுக்களை எதன் அடிப்படையில் தாக்கல் செய்கிறீர்கள் ? மனுவின் சாராம்சம் என்பது பரபரப்பை ஏற்படுத்துவதற்காவே இருப்பது போன்று உள்ளது. கோவிட் தடுப்பூசி மட்டும் இல்லாவிட்டால், எதுபோன்ற பக்கவிளைவுகள் நமக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை மனுதாரர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே முகாந்திரம் இல்லாத இந்த மனுவை விசாரிக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.